For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விமர்சனத்துக்கு முடிவு கட்டுங்க தோனி.. உலகக்கோப்பை அணிக்கு நீங்க நிச்சயம் தேவை

துபாய் : ஆசிய கோப்பை தொடர் இந்திய அணியின் உலகக்கோப்பை தொடருக்கான தயார் நிலையின் ஒரு துவக்கமாக அமைந்துள்ளது.

சில இந்திய வீரர்கள் தவிர்த்து, இந்த தொடரில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் ஆடுகிறார்கள் பல வீரர்கள்.

தோனியை அப்படி நாம் சொல்லிவிட முடியாது. எனினும், அவர் எந்த விமர்சனமும் இன்றி அணியில் நீடிக்க வேண்டும் என்றால் அவர் இந்த தொடரில் தன் பேட்டிங் பற்றி வரும் விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

4வது இடத்தில் இறங்க வேண்டும்

4வது இடத்தில் இறங்க வேண்டும்

தோனி கடந்த 21 ஒருநாள் போட்டிகளில் 389 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் கடைசி நேரத்தில் இறங்கி அதிரடியாக ஆடியது, ஆட்டமிழக்காமல் இருந்தது போன்றவையும் அடங்கும் என்றாலும், நிச்சயம் தோனியின் பேட்டிங் சில சமயம் சறுக்கி தான் விட்டது. அதை எல்லாம் மறந்து, பழைய தோனியாக நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும் அவர். தன் அதிரடி சிக்சர்களை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும். இது அவருக்கும், ரசிகர்களுக்கும் மட்டும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் இல்லை. இந்திய அணிக்கும் சேர்த்தே தான்.

அனுபவ வீரர் தோனி

அனுபவ வீரர் தோனி

தோனி தான் இப்போதுள்ள இந்திய அணியில் அதிக அனுபவம் உள்ளவர். அவரது அனுபவம் இல்லாமல், கோலியின் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை சென்றால் நிச்சயம் இந்தியா வெல்லுமா என்ற சந்தேகம் வந்துவிடும். அதிலும், இங்கிலாந்து தொடரில் ரவி சாஸ்திரி, கோலி கூட்டணி செய்த வேலைகளால் இந்திய ரசிகர்கள் மனம் நொந்து போயுள்ளார்கள். ஒருநாள் தொடரில் ஒரே ஆறுதல் தோனி இருப்பதுதான். கோலி விக்கெட் ரிவ்யூக்கள் கேட்பதில் மோசமாக சொதப்புகிறார். அந்த நேரத்தில் தோனியின் அருமையான ரிவ்யூ முடிவுகள் பற்றி நாம் நினைக்க வேண்டிய நிலை வருகிறது. எனவே, தோனியின் அனுபவம் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை.

சுழல் வீச்சும், தோனி வித்தையும்

சுழல் வீச்சும், தோனி வித்தையும்

இந்திய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு தோனி என்றால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு. காரணம், தோனி ஸ்டம்புகளுக்கு பின்னே இருந்து அவர்களுக்கு அளிக்கும் யோசனைகள், எத்தனை விக்கெட்களை வீழ்த்தியது என கணக்கே இல்லை. அத்தனை தெளிவாக பேட்ஸ்மேன் மனதை படித்து சுழல் பந்துவீச்சாளர்களுக்கு யோசனை சொல்வார் தோனி. இந்த காரணத்துக்காகவும் தோனி இந்திய அணிக்கு தேவை.

தோனி என்றால் தலைவன்

தோனி என்றால் தலைவன்

நிச்சயம் தோனி என்றால் நம் கண் முன் ஒரு பேட்ஸ்மேன் வர மாட்டார். ஒரு கேப்டன் தான் வருவார். அவர் இப்போது கேப்டன் இல்லை என்றாலும், இப்போதைய கேப்டன் கோலிக்கு அவர் பல நேரங்களில் உதவி வருகிறார் என்பது உண்மை. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக கோலி தடுமாறுவதற்கு தோனி இல்லாததும் ஒரு காரணமோ என நினைக்க வேண்டி இருக்கிறது. காரணம், டெஸ்ட் போட்டிகள் போல, ஒருநாள் போட்டிகளில் கோலியின் செயல்பாடுகள் அதிகம் விமர்சிக்கப்படவில்லை. ஒருநாள் போட்டிகளின் போது கேப்டனாக இல்லாத தோனி களத்தில் பல முடிவுகளையும் எடுப்பதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம்.

தோனிக்கு இந்திய அணி தேவையோ இல்லையோ, இந்திய அணிக்கு தோனி தேவை. அதற்காகவாவது, இந்த ஆசிய கோப்பையில் அவர் ரன் குவித்து தன் மீதான விமர்சனங்களை முறியடிக்க வேண்டும்.

Story first published: Monday, September 17, 2018, 18:26 [IST]
Other articles published on Sep 17, 2018
English summary
Dhoni have to settle in his batting spot in Asia Cup 2018 to seal his spot in World cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X