வைரல் வீடியோவில் நம்ம சின்ன வயசு விளையாட்டை ஞாபகப்படுத்திய தோனி - ஸிவா.. என்ன விளையாட்டு தெரியுமா?
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தன் மகள் ஸிவாவுடன் கடற்கரை மணலில் விளையாடிய வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வருகிறது.
தோனியின் வீடியோ எல்லாமே இன்ஸ்டாகிராமில் வைரல் தான். இந்த வீடியோவும் விதிவிலக்கல்ல. இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் லைக்குகளை அள்ளி உள்ளது இந்த வைரல் வீடியோ.

குறும்பு வீடியோ
தோனி தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நிலையில், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தன் செல்ல மகள் ஸிவாவுடன் செய்யும் குறும்பு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
கடற்கரை விளையாட்டு
நேற்று வெளியிட்ட வீடியோவில், தோனி தன் மகள் ஸிவாவுடன் கடற்கரை மணலில் விளையாடிய போது, மணலில் குழி தோண்டி அதில் தன் மகளை நிற்க வைத்து, குழியை மூடினார். இது நமது பால்ய கால நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்தியது.

மணலை பார்த்தாலே..
தோனி இந்த வீடியோ பதிவின் குறிப்பில், "ஒரு குழந்தையாக எப்போது மணலை பார்த்தாலும், நாம் இதை நிச்சயம் செய்வோம்" என குறிப்பிட்டு இருந்தார். ரசிகர்களும் இதை ஆமோதித்து பதிவிட்டு வருகின்றனர்.

தோனியின் அடுத்த தொடர்கள்
தோனி அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளார். 2019 உலகக்கோப்பைக்கு முன்பான கடைசி கிரிக்கெட் தொடர்கள் என்பதால் அனைவரும் தோனியின் பார்ம் மீண்டும் அதிரடிக்கு மாறுமா என பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications