MS Dhoni : திட்டிய மகி பாய் என்ன செஞ்சாரு தெரியுமா.....! உண்மையை போட்டுடைத்த தீபக் சாஹர்
மும்பை:பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு தல தோனி, தம்மிடம் என்ன பேசினார் என்பதை தீபக் சாஹர் வெளியிட்டிருக்கிறார்.
களத்தில் அமைதி, காரியத்தில் கவனம் என்று பெயர் பெற்றவர் தோனி. அமைதியாக இருந்து அணியை வழி நடத்துவதில் கெட்டிக்காரர் என்பதால் கூல் கேப்டன் என்பது அவருக்கு வைக்கப்பட்ட செல்லப் பெயராகும்.
அத்தகைய தோனியையே ஒரு வீரர் கோபப்பட வைத்தது... இணையத்தில் வைரலானது. அதாவது... பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், தீபக் சாஹரை கோபப்பட்டு திட்டிவிட்டார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர் முடிவில் 160 ரன்களை எடுத்தது.

விக்கெட்டுகள் இழப்பு
161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வாலை அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார் ஹர்பஜன் சிங். 18வது ஓவரில் ராகுலும் 19வது மில்லரும் கடைசி ஓவரில் சர்பராஸும் ஆட்டமிழக்க அந்த அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

திட்டிய தோனி
அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவை. அந்த சூழலில் 19வது ஓவரை வீசிய தீபக் சாஹர், முதல் 2 பந்துகளை நோ பாலாக வீசினார். 2வது நோ பாலை வீசிய போது, கடும் கோபமடைந்த தோனி, தீபக் சாஹரை திட்டியதோடு ஆலோசனையும் வழங்கினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பாராட்டிய தோனி
இந்நிலையில், தன் மீது கோபப்பட்ட தோனி, போட்டி முடிந்ததும் என்ன செய்தார் என்று தீபக் சாஹர் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:போட்டி முடிந்ததும் அனைத்து வீரர்களும் டெத் ஓவரை நன்றாக வீசியதற்கு பாராட்டு தெரிவித்தனர்.

தோனி கட்டிப்பிடித்தார்
நான் தொடர்ந்து நோ பாலாக போட்டதால் என்னை திட்டிய கேப்டன் தோனியும், கட்டிப்பிடித்து சிரித்தார். நன்றாக பந்துவீசியதாகவும் இந்த தொடர் முழுவதும் நன்றாக வீசுமாறும் அவர் கூறியதாக தீபக் சாஹர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications