Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராணுவத்துக்கு பிறகு தோனியின் அசத்தல் திட்டம்..! யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..! கலக்கல் தல..!!

டெல்லி: ராணுவ பயிற்சிக்கு பிறகு, கார் தொடர்பான தொழிலில் இறங்க தல தோனி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி ஒரு கார் பிரியர். தற்போது 2 மாத ஓய்வில் இருக்கும் அவர், ராணுவ பயிற்சியில் இருக்கிறார். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று லடாக் பகுதியில் அவர் தேசிய கொடியேற்றுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேநேரத்தில் தோனி ஜம்மு காஷ்மீரில் ஒரு கிரிக்கெட் அகாடமி ஒன்று தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும், அங்குள்ள இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக அந்த அகாடமியை தொடங்கி இலவச பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சர் அமைச்சகத்துடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

கார் தொழில்

கார் தொழில்

இந் நிலையில் ராணுவ பயிற்சி முடிந்தவுடன், மற்றொரு தொழிலில் தோனி இறங்க போகிறார் என்று அதிரடி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, தோனி ஒரு கார் ப்ரியர். எனவே அது தொடர்பான ஒரு தொழிலில் குதிக்க போகிறார் என்று கூறப்பட்டது.

புகழ்பெற்ற நிறுவனம்

புகழ்பெற்ற நிறுவனம்

அதனை உறுதிப்படுத்தும் வகையில், கார் வாங்கும், விற்கும் பிரபல நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராகவும், தூதராகவும் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய கார் வாங்கும், விற்கும் தளமாகும்.

35 நகரங்களில் முன்னிலை

35 நகரங்களில் முன்னிலை

கார்களை எளிதாக விற்கவும் பயன்படுத்திய கார்களை வாங்கவும் அந்த நிறுவனம் உதவுகிறது. நாட்டில் தற்போது 35 நகரங்களில் 155க்கும் மேற்பட்ட கிளைகள் அந்த நிறுவனத்துக்கு உள்ளது. 2ம் கட்டமாக, 300க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தோனி தூதர்

தோனி தூதர்

இந்நிலையில், அந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராகவும், தூதராகவும் தோனி பொறுப்பேற்பார் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைமை இயக்குநர் விக்ரம் சோப்ரா கூறியதாவது:

புதுமை விரும்பி

புதுமை விரும்பி

எங்கள் குடும்பத்தில் தோனியை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். அவர் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு முன்மாதிரி மற்றும் ஹீரோவாக உள்ளார். எதிலும் புதுமையை விரும்புபவர்.

எப்போது வெளியாகும் அறிவிப்பு?

எப்போது வெளியாகும் அறிவிப்பு?

தீர்வுகளைக் காணும் அவரது திறன் உள்ளிட்ட பல அம்சங்கள் தான் தோனியை புகழ்பெற்ற கேப்டனாக்கி இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்த முழு அறிக்கை விரைவில் வெளியிடப் படும் என்று தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஓய்வு அறிவிப்புக்கு பின், இதே போன்று பல தொழிகளில் ஈடுபடுவார் என்று தெரிய வருகிறது.

Story first published: Wednesday, August 14, 2019, 19:43 [IST]
Other articles published on Aug 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+