Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இந்திய டி20 அணியில் மீண்டும் இடம் பிடித்த தோனி.. ரசிகர்கள் குஷி

Recommended Video

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு... திரும்பி வந்த தோனி !

மும்பை : இந்திய டி20 அணியில் தோனி மீண்டும் இடம் பெற்றுள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

நியூசிலாந்து டி20 தொடர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த இரண்டு உத்தேச அணிகளிலும் தோனியின் பெயர் இடம் பிடித்துள்ளது.

தோனி நீக்கம்

தோனி நீக்கம்

கடந்த மாதங்களில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை. அப்போது தோனி இனி டி20 அணியில் ஆடமாட்டார். அவர் இனி ஒருநாள் போட்டிக்கான அணியில் மட்டுமே இடம் பிடிப்பார் என கூறப்பட்டது.

தோனி ரசிகர்கள் ஏமாற்றம்

தோனி ரசிகர்கள் ஏமாற்றம்

இந்திய அணி தேர்வாளர்கள் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் அது தற்காலிகமான நீக்கம் மட்டுமே என கூறினாலும், தோனியின் ரசிகர்கள் டி20 அணியில் அவர் இனி ஆட மாட்டார் என சோக கீதம் வாசித்தார்கள்.

சந்தேகம் கிளம்பியது

சந்தேகம் கிளம்பியது

தோனி ஒருநாள் போட்டிகளில் கடந்த வருடம் சரியாக ரன் குவிக்காத காரணத்தால் தான் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார் என கூறிய சிலர், அடுத்து ஒருநாள் போட்டிகள் அணியிலும் அவர் இடம் பெறுவது சந்தேகமே என தோனி ரசிகர்களை சீண்டி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

தோனி இடம் பெற்றார்

தோனி இடம் பெற்றார்

இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டிகள் தொடருக்கான இந்திய அணியிலும், நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியிலும் விக்கெட் கீப்பர் என குறிப்பிடப்பட்டு தோனியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

ரிஷப் பண்ட் இல்லை

ரிஷப் பண்ட் இல்லை

இந்திய அணியின் வருங்கால விக்கெட் கீப்பராக அறியப்படும் ரிஷப் பண்ட் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. நியூசிலாந்து டி20 தொடருக்கான அணியில் மட்டுமே இடம் பிடித்துள்ளார். இது அவருக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணி - ஆஸி. & நியூசி. ஒருநாள் தொடர்

இந்திய அணி - ஆஸி. & நியூசி. ஒருநாள் தொடர்

இந்திய ஒருநாள் அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே எல் ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது, முஹம்மது ஷமி.

இந்திய அணி - நியூசிலாந்து டி20 தொடர்

இந்திய அணி - நியூசிலாந்து டி20 தொடர்

இந்திய டி20 அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே எல் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது.

Story first published: Monday, December 24, 2018, 18:07 [IST]
Other articles published on Dec 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+