இந்திய ஜிம்னாஸ்டிக் புயல் திபா கர்மாகருக்கு சேவாக் வைத்துள்ள செல்ல பெயர்!
டெல்லி: இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர், ரியோ ஒலிம்பிக்கின் இறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், அவருக்கு செல்ல பெயர் ஒன்று வைத்துள்ளார், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்.
ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவர் ஒலிம்பிக்கில் பைனல் செல்வது இதுதான் முதல் முறை. அந்த சாதனைக்கு சொந்தக்காரரான திபா கர்மாகரை நாடே போற்றிக்கொண்டுள்ளது.
சேவாக் தனது பங்கிற்கு அவரை ஜம்போ ஜெட் என புகழ்ந்துள்ளார். திபா கர்மாகர் செய்யும் ஜம்ப்புகள், பல்டிகள் போன்றவை சேவாக்கின் கண்களுக்கு ஜம்போ ஜெட் விமானம் போல தெரிகிறது போலும்.
தனது டிவிட் ஒன்றில் இதை குறிப்பிட்டுள்ளார் சேவாக். டோணி ஹெலிகாப்டர் என்றால் திபா கர்மாகர் ஜம்போ ஜெட் என பாராட்டியுள்ளார் சேவாக்.
Story first published: Wednesday, August 10, 2016, 14:22 [IST]
Other articles published on Aug 10, 2016


Click it and Unblock the Notifications