For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி இப்போ இந்தியாவில் இல்லை.. எங்கே, என்ன செய்கிறார்…? சிஷ்யன் லீக் செய்த செம போட்டோ…! வைரல்

Recommended Video

Dhoni is now in America with kedar jadhav

நியூயார்க்: தென் ஆப்ரிக்கா தொடரில் இருப்பாரா, மாட்டாரா என்று ரசிகர்கள் படு டென்ஷனில் இருக்க தோனியோ அமெரிக்காவில் கூலாக இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் தற்போது வரை ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

பல முன்னாள் வீரர்களும் தோனியை இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தோனி தனது எதிர்காலம் குறித்து மவுனத்தையே பதிலாக வைத்திருக்கிறார்.

சொல்லாத தோனி

சொல்லாத தோனி

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் தோனி தெரிவிக்க வில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து தன்னை விலக்கி கொண்டு தோனி ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்.

சான்ஸ் இல்லை

சான்ஸ் இல்லை

செப்டம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தோனிக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இளம்வீரர் ரிஷப் பன்ட், எதிர்கால வீரர்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் ஆகியோரின் பெயர்கள் அதிகமாக தேர்வுக்குழுவினர்கள் ஆலோசிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

ரிஷப் பன்டுக்கு மாற்றாக, மற்றொரு விக்கெட் கீப்பர்களாக சாம்ஸன் மற்றும் இஷான் கிஷன் பெயர் பரீசீலிக்கப்படும் என்று தெரிகிறது. ஒரு கட்டத்தில் பன்டும் ஓரங்கட்டப்பட்டு மற்ற இருவருக்கும் வாய்ப்புகளை அளிக்கவும் பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. யாருக்கு வாய்ப்பு என்பது இப்போது கூற முடியாத நிலை காணப்படுகிறது.

அமெரிக்காவில் தோனி

அமெரிக்காவில் தோனி

இந்நிலையில், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அதுக்கான விடை கிடைத்திருக்கிறது. அவர் தற்போது இந்தியாவில் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

போட்டோ ரிலீஸ்

தோனி தற்போது இந்திய அணியின் வீரரான கேதர் ஜாதவ் உடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஒரு கிளப்பில் கோல்ப் விளையாடி உள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து கேதார் ஜாதவ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

வைரல்

வைரல்

தோனியை பற்றிய செய்திகள், பதிவுகளை ரசிகர்கள் தாறுமாறாக பார்த்து வருகின்றனர். தென் ஆப்ரிக்க தொடர் என்ற விஷயம் அவர்களை வேறு பாடாய்படுத்தி வருகிறது. இந்த பதிவு பார்த்த ரசிகர்கள் அதை தற்போது வைரலாக்கி பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Thursday, August 29, 2019, 15:27 [IST]
Other articles published on Aug 29, 2019
English summary
Dhoni is now in America with kedar jadhav, photo released by him, goes viral.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+