Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகத்துலயே சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் தோனி... அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒண்ணுதான்!

துபாய் : சர்வதேச அளவில் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் சிஎஸ்கே கேப்டன் தோனி என்று முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

அவர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சரியான முடிவுகளை எடுப்பார் என்றும் அது அனைத்து வீரர்களுக்கும் வந்துவிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் சிஎஸ்கேவில் விளையாடிவரும் தோனி 5 இடங்களுக்கு கீழே இறங்கி விளையாடக் கூடாது என்றும் அகர்கர் அறிவுறுத்தியுள்ளார்.

ஐபிஎல்லில் காண ஆர்வம்

ஐபிஎல்லில் காண ஆர்வம்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஒரு ஆண்டிற்கும் மேலாக விலகியிருந்த தோனி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்த போதிலும், அவரது ஆட்டத்தை ஐபிஎல் போட்டிகளில் காண அவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இறுதி இடத்தில் சிஎஸ்கே

இறுதி இடத்தில் சிஎஸ்கே

ஆனால் இந்த சீசனில் அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே அளித்துள்ளார். இந்த சீசனில் சிஎஸ்கே தன்னுடைய சிறப்பான ஆட்டங்களை அளிக்கவில்லை. இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7ல் தோல்வியுற்று, ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது சிஎஸ்கே.

கனவான பிளே-ஆப் சுற்று

கனவான பிளே-ஆப் சுற்று

இதனால் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது சிஎஸ்கே. இதுவரை விளையாடியுள்ள எந்த சீசனிலும் பிளே ஆப் சுற்றுக்கு போகாமல் அந்த அணி இருந்ததில்லை. இந்நிலையில் இந்த சீசனில் பிளே ஆப் சுற்று கனவாகும் நிலை சிஎஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ளது.

5 இடங்களுக்குள் விளையாட வேண்டும்

5 இடங்களுக்குள் விளையாட வேண்டும்

இதனிடையே, சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட் மூளைக்கு சொந்தக்காரர் தோனி என்று முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். சூழலுக்கு ஏற்ப சரியான முடிவை எடுக்கும் திறன் அனைவருக்கும் வந்து விடாது என்று கூறியுள்ள அவர், தோனி தற்போது செய்ய வேண்டியதெல்லாம், சிஎஸ்கே போட்டிகளில் 5 இடங்களுக்கு கீழே இறங்கி விளையாடாமல் இருப்பதே என்றும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 21, 2020, 15:08 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+