Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கூச்ச சுபாவம் அதிகம்... ஆனா மனசை படிக்கறதுல சிறப்பானவர்... முன்னாள் கேப்டன் குறித்து நெஹ்ரா

டெல்லி : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி எதிராளியின் மனதை படிப்பதில் மிகவும் சிறப்பானவர் என்று முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Dhoni’s captaincy was saved by Srinivasan | Oneindia Tamil

மிகவும் கூச்ச சுபாவம் மிக்கவர் தோனி என்று கூறியுள்ள நெஹ்ரா, ஆனால் எந்த இளம் வீரரானாலும் எந்த நேரத்திலும் அவரது அறைக்கு சென்று தங்களதுபிரச்சினை குறித்து விவாதிக்கும் அளவுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2004ல் தோனி தன்னுடைய 23வது வயதில் ஆடிய ஆட்டத்திற்கும் தற்போது ரிஷப் பந்தின் ஆட்டத்திற்கும் ஓப்பு நோக்கினால், பந்த் திறமையானவர் என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.

தோனியுடன் சிஎஸ்கேவில் ஆட்டம்

தோனியுடன் சிஎஸ்கேவில் ஆட்டம்

முன்னாள் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியுடன் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். கடந்த 2011 உலக கோப்பை வெற்றிக் கூட்டணியில் இருவரும் இணைந்து ஆடியுள்ளனர். மேலும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தனது சிறப்பான ஆட்டத்தை தோனியுடன் ஆஷிஷ் நெஹ்ரா பதிவு செய்துள்ளார்.

திறமையை வளர்த்து கொண்டவர் தோனி

திறமையை வளர்த்து கொண்டவர் தோனி

இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்தும், அவரது திறமைகள் குறித்தும் சக ஆட்டக்காரராக தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் ஆஷிஷ் நெஹ்ரா. ஆரம்பத்தில் தோனியுடன் தான் விளையாடியபோது வலிமையான ஆட்டத்தை கண்டு வியப்படைந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் முன்னாள் வீரர்கள் கிர்மானி, மோங்கியா போல அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும் பின்னால் அவர் அந்த திறமையை வளர்த்துக் கொண்டதாகவும் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

உடலை வலிமை படுத்திய தோனி

உடலை வலிமை படுத்திய தோனி

இந்திய கிரிக்கெட்டில் அவர் நுழைந்தபோது, அவ்வளவு திறமை மிக்க வீரராக இல்லை என்றும் தொடர்ந்து பேட்மிண்டன், கால்பந்து போன்றவற்றை விளையாடி, தன்னுடைய உடலை வலிமைப்படுத்திக் கொண்டதாகவும் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இதேபோல தோனி மிகுந்த கூச்ச சுபாவம் மிக்கவர் என்றும் மூத்த வீரர்களுடன் எப்போதும் இணைய மாட்டார் என்றும் அவர் மேலும் கூறினார்.

தோனியின் அறை திறந்திருக்கும்

தோனியின் அறை திறந்திருக்கும்

ஆனால் இளம் வீரர்களுக்காக தோனியின் அறையின் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்றும், அவர்கள் சாதாரணமாக அவருடைய அறையில் நுழைந்து, தங்களது பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் வலிமையான மனதை அவர் கொண்டிருந்தார் என்றும், எதிராளிகளின் மனதை படிப்பதில் மிகவும் சிறந்து விளங்கினார் என்றும் நெஹ்ரா குறிப்பிட்டுள்ளார்.

உணர்ச்சிகளை மறைக்க தெரிந்தவர் தோனி

உணர்ச்சிகளை மறைக்க தெரிந்தவர் தோனி

கடந்த 2004ல் தோனி இந்திய அணிக்காக தன்னுடைய 23வது வயதில் விளையாடிய நிலையில், 22 வயதான பந்த்திற்கும் அவருக்கும் அந்த வயதில் உள்ள திறமை குறித்து ஒப்புநோக்கினால், தோனியை காட்டிலும் பந்த் இயல்பாகவே சிறப்பான வீரர் என்றும் நெஹ்ரா தெரிவித்துள்ளார். நாமெல்லாம் நினைப்பதை போல தோனி யாராலும் காயமடைய மாட்டார் கோபம் கொள்ள மாட்டார் என்று இல்லை. மாறாக அவர் அந்த உணர்ச்சிகளை மறைக்கம் திறமை கொண்டவர் என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 18, 2020, 13:03 [IST]
Other articles published on Aug 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+