For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி தூக்கத்தில் எதை பத்தி பேசுறாரு தெரியுமா?அந்த உண்மையை சொன்ன சாக்ஷி!

ராஞ்சி : தோனி லாக்டவுனை குடும்பத்தினருடன் தன் பண்ணை வீட்டில் நிம்மதியாக கழித்து வருகிறார்.

அவர் அவ்வப்போது தன் செல்ல மகள் ஸிவாவுடன் பைக்கில் வலம் வரும் வீடியோக்கள் மற்றும் விளையாடும் வீடியோக்கள் வெளியாகின.

ஆனால், அதெல்லாம் அவரது முக்கிய பொழுது போக்கு இல்லையாம். உண்மையான பொழுதுபோக்கு என்ன என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் அவரது மனைவி சாக்ஷி.

தோனி திட்டம்

தோனி திட்டம்

தோனி இந்திய அணிக்கு திரும்ப வேண்டி 2020 ஐபிஎல் தொடரில் ஆட ஆர்வமாக இருந்தார். கடந்த மார்ச் துவக்கத்தில் அதற்கான தீவிர பயிற்சியை துவங்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி முகாமில் இணைந்து அதிரடி பேட்டிங் மற்றும் கீப்பிங் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

நீண்ட விலகல்

நீண்ட விலகல்

அவர் இந்திய அணியில் நீண்ட காலமாக விலகி இருந்தார். கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதனால், அவர் ஓய்வு பெற உள்ளதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற முயற்சி செய்வதாகவும் ஒரு தகவல் கசிந்தது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. 2020 ஐபிஎல் தொடரும் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டன. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

வீட்டில் ரெஸ்ட்

வீட்டில் ரெஸ்ட்

தோனி ராஞ்சியில் உள்ள தன் பண்ணை வீட்டில் தன் மனைவி, மகளுடன் தங்கினார். அங்கே அவர் ஷேவ் கூட செய்யாமல் வெள்ளை தாடியுடன் காட்சி அளிக்கும் புகைப்படம் சமீபத்தில் வைரல் ஆனது. இடையே தன் மகளுடன் விளையாடி பொழுதை போக்கி வருவதாகவே ரசிகர்கள் எண்ணினர்.

பிடித்த விளையாட்டு

பிடித்த விளையாட்டு

ஆனால், தோனி தனக்கு பிடித்த பப்ஜி (PUBG) மொபைல் விளையாட்டை தான் தீவிரமாக ஆடி வருவதாக சாக்ஷி சென்னை சூப்பர் கிங்ஸ் சமூக வலைதளத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் கூறி உள்ளார். இந்திய அணி வீரர்கள் பலர் பப்ஜி விளையாட்டை ஆடி வருவது தெரிந்தது தான். அதில் தோனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படுக்கையிலும் பப்ஜி ஆட்டம்

படுக்கையிலும் பப்ஜி ஆட்டம்

தன் பண்ணை வீட்டில் தோனி படுக்கையில் கூட பப்ஜி ஆடி வருகிறார். கடந்த மாதம், தோனி தன்னைக் கூட கவனிக்காமல் போனில் விளையாடி வருவதை குறிப்பிட்டு புகைப்படம் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், பேட்டியிலும் அது பற்றி கூறி உள்ளார்.

சாக்ஷி என்ன சொன்னார்?

சாக்ஷி என்ன சொன்னார்?

"தோனிக்கு எப்போதும் சிந்திக்கும் மூளை. அவர் வீடியோ கேம் ஆடினால், அது அவர் மனதை திசை மாற்றுகிறது. அது நல்ல விஷயம் தான். தற்போது என் படுக்கையை பப்ஜி தான் ஆக்ரமித்து உள்ளது. மஹி தூக்கத்தில் கூட பப்ஜி பற்றித் தான் பேசுகிறார்." என கூறினார் சாக்ஷி.

செம காண்டு மொமன்ட்

செம காண்டு மொமன்ட்

தோனி தன்னை கவனிக்காமல் கேம் விளையாடுகிறார் என அவரது மனைவி சாக்ஷி கூறி இருப்பது "செம காண்டு மொமன்ட்" என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். நாங்க மட்டும் தான்னு நினைச்சோம், தோனியும் லாக்டவுனில் பப்ஜி தான் ஆடுறாரா? என சில ரசிகர்கள் கூறி உள்ளனர்.

பைக் அசெம்ப்ளி

பைக் அசெம்ப்ளி

இது தவிர தோனி இந்த லாக்டவுனில் என்ன செய்கிறார் என்பது பற்றியும் சாக்ஷி கூறினார். தோனி ஒரு பைக்கை உருவாக்க தேவையான அத்தனை உதிரி பாகங்களையும் வாங்கி அவரே அசெம்ப்ளி செய்து வருகிறாராம். ஒருமுறை முழு பைக்கையும் முடித்த உடன், ஒரு சின்ன பகுதியை உள்ளே வைக்க மறந்ததால் மீண்டும் முதலில் இருந்து அசெம்ப்ளி செய்தாராம். நல்லாத்தான் பொழுதை போக்குகிறார் தோனி!!

Story first published: Monday, June 1, 2020, 16:57 [IST]
Other articles published on Jun 1, 2020
English summary
Dhoni is playing PUBG in lockdown says Sakshi. He is even sleep talking about PUGB she says.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+