For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தோனியால் தீர போகும் அந்த பிரச்னை… முன்னாள் அதிரடி வீரர் ஓபன் டாக்

Recommended Video

World cup 2019 | தோனிக்கு தகுந்த இடம் எது?- ஸ்ரீகாந்த் யோசனை- வீடியோ

மும்பை:இந்திய அணியில் நீண்ட காலமாக இருந்த பிரச்னை தோனியால் தீரும் என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்து உள்ளார்.

இந்திய அணியானது, 4ம் இடத்துக்கு யார் பொருத்தமானவர் என்பது தெரியாமல் தடுமாறி வந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலான இந்த விவகாரத்தில் ஒரு குழப்பமான நிலையே நிலவி வந்தது. அவர் சரியாக இருப்பார், இவர் சரியாக இருப்பார் என்று ஆளாளுக்கு கருத்து கந்தசாமிகளாக மாறி பேசி வந்தனர்.

4வது இடத்திற்கான சரியான வீரர் கிடைக்காமல் தவித்து வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அணிக்கு 4வது இடத்திற்கான சரியான வீரர் அம்பத்தி ராயுடு தான் என்று கேப்டன் விராட் கோலியும் கூட கருத்து தெரிவித்திருந்தார். அதன் பிறகு ராயுடுவுக்கு அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

வீணான வாய்ப்புகள்

வீணான வாய்ப்புகள்

ஆனாலும் அந்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டது போல தெரிய வில்லை. ராயுடுவின் செயல்பாடு அந்தளவுக்கு திருப்திகரமாக இல்லை. அதை தொடர்ந்து, மீண்டும் 4வது இடத்தில் யாரை போடலாம் என்று முற்றுப் பெறாத கேள்வியாக அந்த பிரச்சனை நீடிக்க ஆரம்பித்தது. 4வது இடத்துக்கு இவர், அவர் என்று.... மீண்டும் கருத்து கந்தசாமிகள் ஒரு ரவுண்டு வலம் வந்தனர்.

ஸ்ரீகாந்த் நம்பிக்கை

ஸ்ரீகாந்த் நம்பிக்கை

இந்நிலையில் இந்திய அணியில் நீண்ட நாளாக நிலவி வந்த 4வது இடத்திற்கான பிரச்னை தற்போது தோனியால் சரி செய்யப்படும் என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:இந்தாண்டு தொடக்கத்திலிருந்து அதிரடி காட்டி வரும் தோனி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் அசத்தினார்.

தோனியின் ரன் குவிப்பு

தோனியின் ரன் குவிப்பு

நடப்பு ஐபிஎல் தொடரின் 11 போட்டிகளில் விளையாடிய தோனி, 358 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். அவரின் சூப்பரான பேட்டிங் சென்னை அணிக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் அதிக நம்பிக்கையை தரும் விதமாக அமைந்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் தோனி மட்டுமில்லாமல், ஸ்ரேயாஸ் அய்யரின் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்.

எழுந்த கேள்விகள்

எழுந்த கேள்விகள்

உலக கோப்பை போட்டி தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகின்றன. கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை அறிவித்துவிட்டன. இந்திய அணியும் அறிவித்தது.தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இருவரும் அணிக்கு தேர்வான போது பல்வேறு சர்ச்சைகளும், கேள்விகளும் எழுந்தன. விமர்சனங்கள் அதிகரித்ததால் அதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்திருந்தது நினைவிருக்கலாம்.

Story first published: Friday, May 3, 2019, 21:04 [IST]
Other articles published on May 3, 2019
English summary
Dhoni is readymade No. 4 for Team India: Krishnamachari Srikkanth.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+