For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 1 ரன் எடுக்க நான் படுற பாடு இருக்கே.. தோனி ஒருநாள் போட்டிகளில் 9,999 ரன்கள்

திருவனந்தபுரம் : தோனி ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 10,000 ரன்களை கடந்து விட்டார்.

எனினும், ஆசிய லெவன் அணிக்காக அவர் எடுத்த ரன்களை நீக்கிவிட்டு பார்த்தால், இந்திய அணிக்காக அவர் இன்னும், 10,000 ரன்களை எட்டவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரன் குவிக்க திணறி வரும் தோனி, இன்னும் 10,000 ரன்களை எட்ட முடியாமல் தடுமாறி வருகிறார்.

ஆசிய லெவனுக்காக 174

ஆசிய லெவனுக்காக 174

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி வரை, தோனி இந்திய அணிக்காக 9,999 ரன்கள் எடுத்து இருக்கிறார். 2007இல் ஆசிய லெவன் அணி, ஆப்ரிக்க லெவன் அணியை எதிர்கொண்டது. அந்த தொடரில் ஆசிய லெவன் அணிக்காக ஆடிய தோனி 174 ரன்கள் குவித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தோனி தற்போது 10,173 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஆசிய லெவன் அணிக்காக எடுத்த 174 ரன்களை நீக்கினால், இந்திய அணிக்காக அவர் எடுத்தது 9,999 ரன்கள் மட்டுமே.

இந்த ஆண்டு மோசம்

இந்த ஆண்டு மோசம்

இந்த ஆண்டில் தோனி இதுவரை 12 இன்னிங்க்ஸ் ஆடி 252 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 25க்கும் கீழே என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ட்ரைக்ரேட் 68.10 என்ற அளவில் தான் உள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் என பெயர் எடுத்த தோனி, இந்த ஆண்டு முழுவதும் மிக நிதானமாக பேட்டிங் செய்ததுடன், ரன் குவிக்கவும் தவறினார்.

1 ரன் எடுத்தால்

1 ரன் எடுத்தால்

இதனால், எளிதாக இந்திய அணிக்காக பத்தாயிரம் ஒருநாள் போட்டி ரன்களை எட்ட வேண்டிய அவர், தடுமாறி வருகிறார். தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனக்கு கிடைத்த மூன்று பேட்டிங் வாய்ப்பிலும் சொற்ப ரன்களே எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் 1 ரன் எடுக்கும் பட்சத்தில் தோனி பத்தாயிரம் ரன்களை எட்டி புதிய சாதனை படைப்பார்.

டி20 அணியில் இருந்து நீக்கம்

டி20 அணியில் இருந்து நீக்கம்

தோனி சமீபத்தில் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. தோனி ஒருநாள் போட்டிகளில் 2019 உலகக்கோப்பை வரையாவது நீடிப்பாரா? என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, October 30, 2018, 12:24 [IST]
Other articles published on Oct 30, 2018
English summary
Dhoni is short of 1 run to reach 10000 runs for India in ODI. He may reach that milestone in the 5th ODI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X