Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த தோனி இருக்காரே… எப்போதுமே இப்படிபட்டவர் தான்..! அந்த கருத்தை சொல்லி அதிர வைத்த அவர்

Recommended Video

MSK Prasad | தோனி எப்போதுமே இப்படிபட்டவர் தான்... எம்எஸ்கே பிரசாத் கருத்து

மும்பை: மகேந்திர சிங் தோனி எப்போதுமே, குறுகிய ஓவர் போட்டிகளில் சிறப்பாக செயல் படுகிறார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பைக்கு பின் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. அவரது உலக கோப்பை ஆட்டமும் அப்படி தான் இருந்தது. ஓய்வு குறித்து தோனி எந்த கருத்தையும் இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து விலகினார். பின்னர் ராணுவ பயிற்சி பெற இருப்பதால் பாராஷூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். விக்டர் படையில் இணைந்து காஷ்மீர் பகுதியில் ரோந்து பணியில் இறங்கினார்.

லிமிடெட் ஓவர் போட்டிகள்

லிமிடெட் ஓவர் போட்டிகள்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது : குறுகிய ஓவர் போட்டிகளில் தோனி எப்போதுமே சிறப்பாக செயல்படுகிறார். உலக கோப்பை தொடரில் தோனி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்து அணிக்கு பலம் சேர்த்தவர்.

சிறந்த பினிஷர்

சிறந்த பினிஷர்

அதோடு ஒரு முக்கிய விஷயத்தையும் கூறலாம். இன்றளவும் மிகச்சிறந்த பினிஷர் என்றால் அது தோனி தான். தனது அனுபவத்தால் கேப்டனுக்கு அவ்வப்போது உதவி செய்து வருகிறார்.

இணையானவர்

இணையானவர்

தோனிக்கு இணையாக மற்றொரு நபரை அணியில் உருவாக்க திட்டம் இருக்கிறது. அதன் படியே ரிஷப் பன்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. அதற்காகவே அவரை அணியில் இணைத்துள்ளோம் என்று கூறினார்.

அமெரிக்கா பயணம்

அமெரிக்கா பயணம்

தற்போது தோனி இல்லாத இந்திய அணி அமெரிக்காவில் உள்ளது. கேப்டன் கோலியின் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. அந் நாட்டுடன் மூன்று டி 20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் முதல் இரண்டு டி 20 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. மற்ற போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும்.

Story first published: Friday, August 2, 2019, 12:39 [IST]
Other articles published on Aug 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+