Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனி இல்லன்னா... நாங்க இல்லை... உருகி, உருகி பாராட்டிய குல்தீப் யாதவ் ஓபன் டாக்

Recommended Video

இன்று 4 வது ஒருநாள் போட்டி... தொடரை வெல்லுமா இந்தியா

மொகாலி:தல தோனி இல்லையேல்... நாங்கள் இல்லை என்று பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

தல தோனி, ஆஸ்திரேலியாவுக்கான கடைசி 2 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அடுத்து வரும் உலக கோப்பை தொடருக்கு முந்தைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அணியில் இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடைசி 2 போட்டிகளிலும் தோனி இல்லாதது யாருக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறதோ, இல்லையோ.. இளம் வீரர்களுக்கு சற்று ஏமாற்றமாக தான் இருக்கும்.

தோனி தனி

தோனி தனி

ஏன் என்றால்... இளம் வீரர்களை தோனி உற்சாகப்படுத்தும் விதமே தனி. அவர்களின் திறமையை அறிந்து உரிய வாய்ப்பு கொடுத்து விளையாட வைப்பார்.

இளம்வீரர்களுக்கு வாய்ப்பு

இளம்வீரர்களுக்கு வாய்ப்பு

இக்கட்டான சூழ்நிலைகளில்... இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கி... அவர்களை மெருகேற்றுவார். எந்த தருணத்திலும், இளம் வீரர்களை உற்சாகப்படுத்தும் அவரின் இந்த நடவடிக்கை, அணியின் வெற்றிக்கு பல வகைகளில் உதவி இருக்கிறது.

தோனி கிடையாது

தோனி கிடையாது

இந் நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், கடைசி இரண்டு போட்டிகளில் தோனி ஆடமாட்டர் என்றும், அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். உலக கோப்பையில் தோனியின் பங்களிப்பு அவசியம் என்பதற்காக இந்த ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

ரிஷப்புக்கு வாய்ப்பு

ரிஷப்புக்கு வாய்ப்பு

கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில், இந்திய அணியில் தோனியின் பங்கு என்ன என்பது குறித்து இளம் வீரரான குல்தீப் யாதவ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

அவர் கூறியிருப்பதாவது: இளம் வீரர்கள் அனைவரின் சிறப்பான ஆட்டத்திற்கு பின்னாலும் தோனியின் ஆலோசனைகள் நிச்சயம் இருக்கும். உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பரை பெற்றிருக்கிறோம்.

ஆலோசனைகள்

ஆலோசனைகள்

கிரிக்கெட்டில் அவரது அனுபவங்கள் ஏராளம். இளம் வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், ஊக்கங்களையும் தோனி எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருப்பார்.

அறிவுரை அளிப்பார்

அறிவுரை அளிப்பார்

என்னை போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களுக்குமே தோனியின் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அணியை அவர் வழிநடத்தும் விதமே தனி என்றார்.

Story first published: Sunday, March 10, 2019, 10:58 [IST]
Other articles published on Mar 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+