
இரண்டு வீரர்கள்
2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டி வரை செல்லும் அணி என பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இரண்டு வீரர்கள் தான் அணியை வழிநடத்தும் இடத்தில் இருக்கிறார்கள். ஒருவர் கேப்டன் கோலி, மற்றொருவர் மூத்த, அனுபவ வீரர் தோனி.

கோலி எப்படி?
இவர்கள் இருவரில் யார் அணியில் முக்கிய பங்கு வகிப்பார்கள்? கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும், கேப்டன்சியில் அவர் திறமையை பல முக்கிய தருணங்களில் வெளிக் காட்டியதில்லை.

வழி காட்டும் தோனி
அதே சமயம், தோனி தற்போது கேப்டன் இல்லை என்றாலும், அணியின் மூத்த வீரர், முன்னாள் கேப்டன் என்ற அடிப்படையில் தாமாகவே முன்வந்து இளம் வீரர்களுக்கு வழி காட்டி வருகிறார்.

விக்கெட் வேட்டைக்கு காரணம்
பல சமயம் இளம் பந்துவீச்சாளர்களுக்கு யோசனைகளை கூறி விக்கெட் வேட்டை நடத்த காரணமாக இருக்கிறார். கேப்டன் கோலி பல சமயங்களில் களத்தில் தோனியின் உதவியை நாடுகிறார்.

வாய்ப்பு அதிகம்
இந்த காரணங்களை கூறிய முகமது கைஃப், இதனால் அணியில் தோனி தான் முக்கிய வீரர். கோலி, தோனி மற்றும் பிற வீரர்கள் நல்ல பார்மில் இருக்கும் நிலையில், இந்தியா உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் என கூறினார்.

தோனி பேட்டிங் பார்ம்
தோனி 2018ஆம் ஆண்டு பேட்டிங்கில் பார்ம் இன்றி தவித்து வந்தாலும், உலகக்கோப்பை நடைபெற உள்ள 2019ஆம் ஆண்டில் அதிரடியாக பார்முக்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications