உலக கோப்பையில் தோனியின் டோன் செமையா இருக்கும்… பாராட்டி தள்ளும் முன்னாள் கேப்டன்
Recommended Video
வெலிங்டன்:உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக தோனி இருப்பார் என்று நியூசி. முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் கூறி இருக்கிறார்.
உலக கோப்பைக்கான இந்திய அணி வரும் 22ம் தேதி இங்கிலாந்துக்கு பயணமாகிறது. இந்த முறை நிச்சயம் கோப்பையை இந்தியா வெல்லும் என்றும் அதற்கேற்ப தான் அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை எதிர் கொள்கிறது. இளமையும், அனுபவமும் கலந்த அணியாக இந்தியா இருக்கிறது. இந் நிலையில், உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக தோனி இருப்பார் என்று நியூசி. முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் கூறி இருக்கிறார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:ஐபிஎல் தொடர் முழுவதும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் தோனி. இங்கிலாந்து உலக கோப்பையிலும் அதே திறனும் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடுவார். உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துடுப்பே தோனிதான்.
போட்டி ஒவ்வொரு முறையும், அடுத்தக்கட்ட நகர்வுக்கு போட்டி எப்படி செல்லும் என்பதை முன்கூட்டியே கணிப்பவர். அவர் மனதுக்குள் எப்போதும் ஒரு ப்ளூ பிரிண்ட் ஓடிக் கொண்டேயிருக்கும்.
சமீப காலமாக உடல்திறனை மேம்படுத்தி வைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஒரு பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக ஆடியிருக்கிறார். உலக கோப்பையில் விளையாடுவதற்கான முழுமையான டோனுடன் தோனி இருக்கிறார் என்று மெக்கல்லம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications