
வைரல்
இதனால் இந்த போராட்டம் சர்வதேச அளவில் வைரலானது. இணையம் முழுக்க பலரும் இது தொடர்பாக பேச தொடங்கினார்கள். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான மக்கள் இந்த ஆதரவு காரணமாக உற்சாகம் அடைந்தனர். அதே சமயம் மத்திய அரசுக்கு ஆதரவான தரப்பினர் இதை இந்தியாவிற்கு எதிரான சதி என்றனர்.

இந்திய வீரர்கள்
இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட வேண்டாம். இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது.வெளிநாட்டு பிரச்சாரங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டது. இதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்ததற்கு எதிராக இந்திய பிரபலங்கள் பதில் அளித்து வருகிறார்கள்.

சச்சின்
சச்சின் டெண்டுல்கர் , ரோஹித் சர்மா, கோலி என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இது தொடர்பாக டிவிட் செய்தனர். பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் வரிசையாக ஒரே மாதிரி இந்தியாவிற்கு ஆதாரவாக டிவிட் செய்தனர். இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது.வெளிநாட்டு பிரச்சாரங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று டிவிட் செய்தனர்.

மோசம்
இதற்காக #IndiaTogether #IndiaAgainstPropaganda என்ற டேக்குகளை பிரபலங்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் தோனி மட்டும் இதுவரை எந்த கருத்தும் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை. எல்லா வீரர்களும் அரசுக்கு ஆதரவாக டிவிட் செய்த நிலையில் தோனி மட்டும் விவசாயிகள் போராட்டத்தை எதிர்த்தோ அல்லது அதை ஆதரித்தோ கருத்து தெரிவிக்கவில்லை.

வைரல்
தோனியின் இந்த தனிப்பட்ட முடிவு பெரிய வைரலாகி உள்ளது. தோனி எப்பவும் வித்தியாசமானவர். அவர் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் மற்ற வீரர்கள் போல டிவிட் செய்யவில்லை. தல தலதான் என்று பலரும் அவருக்கு ஆதரவாக டிவிட் செய்து வருகிறார்கள். தோனி இதுகுறித்து மௌனமாக இருப்பது அவரின் ரசிகர்ளை கவர்ந்துள்ளது .

விவசாயம்
கிரிக்கெட் வீரர் தோனி தற்போது தீவிரமாக விவசாய பணிகளை செய்து வருகிறார். தனது பண்ணை வீட்டில் தானே டிராக்டர் மூலம் உழுது விவசாய பணிகளை செய்து வருகிறார். இவரின் பண்ணையில் விளைவிக்கப்படும் பொருட்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி ஆகி வருகிறது. இந்த நிலையில் விவசாய போராட்டத்திற்கு எதிராக தோனி எதுவும் பேசாமல் அமைதி காத்து இருக்கிறார்.

அரசியல்
தோனி விவசாயம் செய்கிறார். அவருக்குத்தான் விவசாயிகளின் கஷ்டம் தெரியும். அரசியல் மீது தோனி இதுவரை ஈடுபாடு காட்டியது இல்லை. இதனால் அவர் இப்போது அமைதி காக்கிறார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications