ரேங்கிங்கில் முன்னேறிய தோனி.. ஓய்வில் இருந்தாலும் முதல் இடத்தில் நீடிக்கும் இந்திய வீரர்கள்!
Recommended Video

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய வீரர்கள் பலர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இந்தியா அபாரமாக செயல்பட்டது. அதையடுத்து இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதே சமயம் நியூசிலாந்து அணி அணிகள் தரவரிசையில் ஒரு இடம் இறங்கி நான்காம் இடத்தில் இருக்கிறது.

இந்தியா 1 புள்ளி
இந்திய அணி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை 2-1 எனவும், நியூசிலாந்து தொடரை 4-1 எனவும் கைப்பற்றியது. இந்தியா நியூசிலாந்து தொடருக்கு முன் 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்தியா ஒரு புள்ளி கூடுதலாக பெற்று 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

முதல் இடத்தை நெருங்கியது
ஒருநாள் போட்டி அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் இருக்கிறது. உலகக்கோப்பை இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில், இந்தியா முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் நெருங்கி உள்ளது.

நியூசிலாந்து பின்தங்கியது
ஒருநாள் தொடரில் 1-4 என மோசமாக தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி தொடருக்கு முன் 113 புள்ளிகளுடன் இருந்தது. தற்போது தொடருக்கு பின் 111 புள்ளிகள் பெற்று ஒரு இடம் கீழிறங்கி நான்காம் இடம் பெற்றுள்ளது.

தோனி முன்னேற்றம்
இந்திய வீரர்களில் பேட்ஸ்மேன் தரவரிசையில் தோனி மூன்று இடங்கள் முன்னேறி 17ஆம் இடத்தை பெற்றுள்ளார். கேதார் ஜாதவ் 35ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். தவான் பத்தாவது இடத்திலும், கோலி, ரோஹித் முதல் மற்றும் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர்.

சாஹல், புவி முன்னேற்றம்
பந்துவீச்சாளர்களில் நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத பும்ரா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட சாஹல் ஐந்தாம் இடத்திற்கும், புவனேஸ்வர் குமார் 17வது இடத்திற்கும் முன்னேறி உள்ளனர்.

குல்தீப் யாதவ் பின் தங்கினார்
குல்தீப் யாதவ் மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார். இந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் பவுல்ட் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications