ராணுவத்தில் இணைந்த முதல் நாளிலே இப்படி..! தல தோனி செய்த ‘அந்த’ காரியம்..! இணையத்தில் வைரல்
Recommended Video
காஷ்மீர்: தல தோனி ராணுவத்தில் இணைந்ததும் வீரர்கள் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், இணையத்தில் ஏகத்துக்கும் வைரலாகி வருகிறது.
உலக கோப்பை போட்டிகளில் விளையாடிய தோனி, 2 மாதங்கள் தான் ஓய்வில் இருக்கப் போவதாக அறிவித்தார். அந்த இரண்டு மாதங்களும் அவர் இந்திய ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.
ஆகஸ்ட் 31 வரை 106 டிஏ பட்டாலியனில் அவர் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார். அந்தக் குழு, காஷ்மீரில் இருக்கும் விக்டர்போர்ஸ் எனும் படையின் ஓர் அங்கமாக செயல்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

விக்டர் தோனி
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் தோனி இணைந்தார். அவர் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் பணியில் ஈடுபடவுள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைரல் போட்டோ
தோனி ராணுவத்தில் இணைந்ததும் வீரர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதுவும் அவர் கிரிக்கெட் பேட்டில் கையெழுத்திட்டு உற்சாகம் அளித்தார். அவை இணையத்தில் ஏகத்துக்கும் வைரலாகி வருகிறது.

கர்னல் பதவி
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் தோனிக்கு 2011ம் ஆண்டு ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு 2016ம் ஆண்டு பாரா ரெஜிமெண்ட் போர்ஸில் பயிற்சி பெற்றார்.

அறிவிப்பு எப்போது?
உலக கோப்பை தொடர் சென்ற மாதம் நிறைவடைய, இந்தியாவோ அரை இறுதியோடு வெளியேறி, விமர்சனத்தை எழுப்பியது. அதன்பிறகு தோனியின் ஓய்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை அப்படி நடக்கவில்லை.


Click it and Unblock the Notifications