For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ms Dhoni: அவரு சண்டைக்கு போகலீங்க… என்னன்னு கேட்கதாங்க போனாரு… தோனிக்கு அந்த நபர் வக்காலத்து

ஜெய்பூர்: நடுவர்களிடம் தெளிவாக கேட்கவே மைதானத்திற்குள் தோனி வந்தார் என்று சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறியுள்ளார்.

நேற்றைய சென்னை, ராஜஸ்தான் போட்டியில் நடைபெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மைதானத்தில் நடுவரிடம் அவர் செய்த வாக்குவாதம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த கடைசி ஓவரில் வீசப்பட்ட பந்து ஒன்று, நோ பால் என்று ஒரு அம்பயர் அறிவிக்கிறார். ஆனால்... லெக் திசையில் இருக்கும் அம்பயரோ அதை நோபால் இல்லை என்று மறுக்கிறார்.

தோனி..! என்ன.. உங்க மனசில பெரிய ஆபிசருன்னு நெனைப்போ? கழுவி, கழுவி ஊத்தும் முன்னாள் வீரர்கள் தோனி..! என்ன.. உங்க மனசில பெரிய ஆபிசருன்னு நெனைப்போ? கழுவி, கழுவி ஊத்தும் முன்னாள் வீரர்கள்

ப்ரீஹிட் இல்லை

ப்ரீஹிட் இல்லை

அதாவது... 19வது ஓவரின் 4வது பந்தை வீசிய ஸ்டோக்ஸ், சாண்ட்நர் இடுப்பிற்கு மேல் வீசியதால் கிரீஸ் அருகே இருந்த நடுவர் உல்ஹாஸ் காந்தி நோ பால் என்று சிக்னல் காட்டினார். ஆனால் நோ பால் வீசப்பட்டால் வழங்கக்கூடிய ப்ரீ ஹிட் வழங்கவில்லை.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

மைதானத்தில் குழப்பம் நிலவ தொடங்கியது. அப்போது வெளியில் இருந்து போட்டியை கண்டு கொண்டு இருந்த தோனி, மைதானத்திற்கு உள்ளே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ராஜஸ்தான் வீரர்கள் சிலர் நடுவரிடம் வர, ரசிகர்கள் அனைவருமே குழம்பி போயினர்.

அதிகாரம் உண்டு

அதிகாரம் உண்டு

இறுதியில் நோ பாலும் இல்லை,ப்ரீ ஹிட்டும் இல்லை என முடிவு கொடுக்கப் பட்டு, பேட்ஸ்மேன் ஓடி எடுத்த 2 ரன்கள் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. கிரிக்கெட் விதிகளின் படி இடுப்பு அளவிற்கு மேல் வரும் பந்தை நோபால் என அறிவிக்கும் அதிகாரம் ஸ்கொயர் லெக் திசையில் இருக்கும் 2வது நடுவருக்கே உண்டு.

இதுவே காரணம்

இதுவே காரணம்

அந்த வகையில் நேற்று ஸ்கொயர் லெக் திசையில் இருந்த நடுவர் ப்ருஸ் ஒக்ஸேன்போர்ட் அதை நோ பால் என அறிவிக்காமல் சரியான பந்து என கூறியதே அந்த குழப்பத்துக்கு காரணம். இறுதியில் அதை சரியான பந்து என கிரீஸ் அருகே இருந்த நடுவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவானது.

தோனிக்கு கண்டனம்

தோனிக்கு கண்டனம்

நோ பால்... பிறகு சரியான பந்து என்கிறீர்களே என தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்ன செய்கிறார் தோனி என சென்னை ரசிகர்களே ஒரு நிமிடம் திகைப்புக்கு ஆளாகினர். பல்வேறு முன்னாள் வீரர்களும் தோனியின் இந்த நடடிவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பயிற்சியாளர் விளக்கம்

பயிற்சியாளர் விளக்கம்

சர்ச்சைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:

தெளிவு பெற சென்றார்

தெளிவு பெற சென்றார்

கடைசி ஓவரில் அந்த குறிப்பிட்ட பந்தில் எங்களுக்கு தெளிவு கிடைக்க வேண்டும். அம்பயர்களிடம் பேசி அதற்கான தெளிவை பெறவே தோனி களத்திற்கு சென்றார்.

சரி, தவறு

சரி, தவறு

எல்லா விஷயங்களிலும் சரி, தவறு என்ற இரண்டு விதமாக கருத்துகள் இருக்கும். ஆனால் நோ பால் என்று அறிவித்துவிட்டு பின்னர் அந்த முடிவிலிருந்து அம்பயர்கள் பின்வாங்கினர். எனவே அதுகுறித்த தெளிவை பெறவே தோனி களத்திற்கு சென்று அம்பயர்களுடன் பேசினார் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 12, 2019, 15:38 [IST]
Other articles published on Apr 12, 2019
English summary
Dhoni just wanted clarity says coach Fleming.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X