Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் காயத்தை மறைத்து ஏன் ஆடினார் தோனி..? வெளியான சீக்ரெட்... ரசிகர்கள் ஷாக்..!

Recommended Video

Dhoni injury in world cup | உலக கோப்பையில் காயத்தை மறைத்து ஏன் ஆடினார் தோனி..?

மும்பை: உலக கோப்பையில் தோனியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை படு சீக்ரெட்டாக வைத்திருந்தன் மர்மம் என்ன என்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

12வது உலக கோப்பை போட்டி அண்மையில் இங்கிலாந்தில் முடிந்தது. பல்வேறு சர்ச்சைகள், நடுவர்களின் மோசமான தீர்ப்புகள் என முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தொடர் பரபரப்பாக பேசப்பட்டது. பல முக்கிய போட்டிகளில், நடுவர்களின் தவறான தீர்ப்புகள் அணிகளின் தலையெழுத்தையே மாற்றின.

பைனலில், இறுதி ஓவர்களில் கூட மோசமான தீர்ப்பு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் வெற்றி பலவிதமாக கருத்துகளுக்கு வழிவகுத்தது. இந்திய அணி உலக கோப்பை தொடரில் செமி பைனல் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்துடன் மோதியது.

தோனி விரல் முறிவு

தோனி விரல் முறிவு

அந்த போட்டியில் இந்திய அணி உடை ஆரஞ்சு வண்ணம். போட்டியில் தோனி ஓரளவிற்கு நன்றாக ஆடினாலும், அவரது கையில் விரல் முறிவு ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்ல போனால் அந்த வலியுடனும் தான் தமது ஆட்டத்தை அவர் தொடர்ந்தார்.

பதற்றத்தில் ரசிகர்கள்

பதற்றத்தில் ரசிகர்கள்

போட்டியில் அந்த தடுமாற்றத்தையும் ரசிகர்கள் கண்டனர். நேரில் பார்த்த அவரது ரசிகர்கள் இது குறித்து கவலை அடைந்தனர். தொலைக்காட்சிகளில் அதை கண்ட ரசிகர்களும் பதறினர்.

வெளியான ரகசியம்

வெளியான ரகசியம்

இந்நிலையில் அந்த காயம் குறித்து தற்போது அதிர்ச்சிகரமான, வெளிவராத ரகசியம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, காயம் அடைந்ததை அணியின் நலன் கருதி சொல்லாமல் இருந்து விளையாடி இருக்கிறார்.

இடது கை பயன்பாடு

இடது கை பயன்பாடு

போட்டியின்போது தோனி காயமடைந்துள்ளார். அதாவது, விரலில் உள்ள முக்கியமான சிறு எலும்பு உடைந்துள்ளது. இது தோனியை கடுமையாக பாதித்தது. அதனால் தான், கையை மடக்காமல் கூட உலக கோப்பை தொடர் முழுவதும் ஆடிக்கொண்டிருந்தார். வீரர்களுக்கு கை கொடுக்கும் போது கூட இடது கையை தான் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டார்.

தோனி முயற்சி

தோனி முயற்சி

மேலும், இந்த காயத்தை தோனி சற்று ரகசியமாகவே வைத்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அந்த காயம் பற்றி யாரும் பெரிதாக ஏதும் பேசி கொள்ள வேண்டாம் என்று நினைத்துள்ளார். போட்டிக்கு பின்னர், ஸ்கேன் செய்து பார்க்க மருத்துவர்கள் அழைத்துள்ளனர்.

தோனி சமாளிப்பு

தோனி சமாளிப்பு

ஆனால் இந்திய அணி மருத்துவர்கள் குழுவின் அழைப்பை நிராகரித்தார். ஸ்கேன் வேண்டாம், நன்றாக இருக்கிறேன் என்று சமாளித்துள்ளார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு வேளை அந்த காயம் பெரிதாக இருந்து அடுத்த சில போட்டிகளில் ஆட முடியாமல் போய்விடும் என்றும் தோனி நினைத்துள்ளார்.

ராணுவத்தில் சேர்ப்பு

ராணுவத்தில் சேர்ப்பு

அதனை தாண்டி உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் ராணுவத்தில் இணைய அப்போதே முடிவு செய்திருக்கிறார். காயம் இருந்தால் கண்டிப்பாக ராணுவத்தில் உடனடியாக சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அதுவும் தோனிக்கு நன்றாக தெரியும்.

சீக்ரெட் லீக்

சீக்ரெட் லீக்

அதன் காரணமாக இதனை நினைவில் வைத்து, அந்த காயம் பற்றி யாருக்கும் வெளியே தெரிய வேண்டாம் என்று நினைத்து மருத்துவர்களிடம் ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது தற்போது வெளியே வந்துள்ளது. மேலும் காயம் பற்றி வெளியே தெரிந்தால் தம்மை அணியில் இருந்து ஓரஙகட்டி வைத்து விடுவார்கள் என்று எண்ணியிருந்தார்.

Story first published: Tuesday, August 13, 2019, 20:37 [IST]
Other articles published on Aug 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+