எப்போ, எப்படி செய்யனும் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.. டோணி பற்றி சங்ககாரா
சென்னை: கேப்டன் பொறுப்பை எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது டோணிக்கு நன்கு தெரியும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்தார்.
நிருபர்கள் கேள்விக்கு சங்ககாரா அளித்த பதில்களின் தொகுப்பை பாருங்கள்: இலங்கையில் ஒன்டே-டெஸ்ட் போட்டிகளுக்கு மேத்யூசும், டி20 போட்டிகளுக்காக சண்டிமாலும் இலங்கை அணி கேப்டன்களாக செயல்படுகிறார்கள். அதே வியூகத்தை இந்திய அணியில் புகுத்தலாமா என்பது பற்றி நான் பதில் சொல்ல முடியாது.
அதேநேரம் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவது ஒரு கலை. டெஸ்ட் ஆடும் வீரர்களில் அதிகம்பேர் டி20 போட்டிகளில் ஆடுவது பொருத்தமாகாது.

டோணிக்கு தெரியும்
3 ஒருநாள் தொடர்களை டோணி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக இழந்திருக்கலாம்தான். ஆனால், கிரிக்கெட்டை ஒரு மதம் போல பாவிக்கும் நாட்டில் கேப்டனாக பணியாற்றுவது சிரமமானது என்பதை டோணி நன்கு அறிந்திருப்பார்.

அவர் முடிவு
நெருக்கடியை டோணி மட்டுமே நன்கு உணர்ந்திருப்பார் என்பதால், கேப்டன் பதவியில் தொடர வேண்டுமா, விலக வேண்டுமா என்பது டோணிக்கு மட்டுமே நன்கு தெரியும்.

கோஹ்லியும் ரெடி
டோணிக்கும், தேர்வாளர்களுக்கும் இடையே மட்டுமே நடைபெற வேண்டிய உரையாடல் இது. டோணியின் அடுத்தகட்ட முடிவு பற்றி பிறர் கருத்து கூறுவது சரியல்ல. கோஹ்லி ஆக்ரோஷமான வீரர். அநேகமாக கேப்டன் பொறுப்புக்கு அவர் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.

ஸ்பின் ஆதிக்கம்
உலக கோப்பை டி20 போட்டியில் அணிகளின் வெற்றிக்கு, ஸ்பின்னர்கள் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நெருக்கடியை சமாளிப்பதற்கு டோணிக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. இவ்வாறு குமார் சங்ககாரா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications