கோலிங்கறது பேருதான்.. சரியா? உன் திறமையை மேட்ச்ல காட்டு... ஏன் தோனி அப்டி சொன்னீங்க?
Recommended Video

சென்னை:ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோத உள்ள நிலையில் தோனி, கோலி இருவரும் இடம்பிடித்துள்ள பிரத்யேக விளம்பரம் இணையதளத்தில் வெளியாகி கலக்கி வருகிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைாதனத்தில் நடைபெறவுள்ளது.
தோனி, கோலி இருவரும் மீண்டும் நேருக்கு நேர் இந்தப் போட்டியில் களம் காண்கின்றன. ஆகையால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரத்யேக விளம்பரம்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில், ஐபிஎல் நிர்வாகம் தமது டுவிட்டர் தளத்தில் பிரத்யேக விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
பலத்த ஆதரவு
அதில் தோனி, கோலி இருவரின் ரசிகர்களும் சென்னை, பெங்களூரு அணிக்கு போட்டிப் போட்டு ஆதரவை வெளிப்படுத்துவதை போன்று உள்ளது. இருவரும் மொட்டை மாடியில் கையில் தேநீர் கோப்பைகளுடன் பேசி கொண்டு இருக்கும் காட்சிகள் உள்ளன.

பெயர்கள் மட்டும் தான்
இறுதியில், தோனி, கோலி என்று ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பது எல்லாம் பெயர்கள் மட்டும்தான் என்று தோனி, கோலியிடம் சொல்கிறார். அதற்கு கோலியும், ஆமாம்... சரிதான், இதில் யார் சிறந்தவர்கள் என்பது போட்டியின் போது தெரிந்துவிடும் என்று தோனியிடம் கூறுகிறார்.

தேநீர் கோப்பை
பின் தோனி மார்ச் 23 ம் தேதி போட்டிக்கு தாமதமாக வராமல் விரைவாக வா என்று கோலியிடம் கூறியவிட்டு, தமது கையில் உள்ள தேநீர் கோப்பையை மஞ்சள் நிற தட்டில் வைத்துவிட்டு வெளியேறுகிறார். அதவாது அந்தப் போட்டியில் சென்னை தான் வெல்லும் என்பதை சூசகமாக கூறியிருக்கிறார்.

பெங்களூரு
அதைக் கண்ட கோலியோ... லேசாக சிரித்தவாறு.... பக்கத்தில் இருக்கும் சிவப்பு நிற தட்டை எடுத்து தோனியின் தேநீர் கோப்பையின் மேல் வைத்தார். அதன் மூலம் சென்னை மண்ணில் பெங்களூரு அணிதான் வெற்றிபெறும் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

வைரல் விளம்பரம்
இவ்விரு வீரர்களும் தங்களது அணிதான் சிறந்தது என்பது வெளிப்படுத்தி இந்த அல்டிமெட் விளம்பரம் இணையளத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் டாப்கிளாஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications