Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் 'எஸ்சான' டோணி, கோஹ்லி

டெல்லி: இம்மாதம் வங்கதேச ஏ அணிக்கு எதிராக நடைபெறும் 3 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா வரும் வங்கதேச 'ஏ' அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 3 நாள் (டெஸ்ட்) போட்டிகளில் பங்கேற்கிறது.

Dhoni, Kohli not playing for India A

ஒரு நாள் போட்டிகள் செப்டம்பர் 16, 18, 20ல் பெங்களூரில் நடக்கிறது. செப்டம்பர் 22-24ல் மைசூரில் ரஞ்சி சாம்பியன் கர்நாடக அணி மற்றும் செப்டம்பர் 27-29 தேதிகளில் பெங்களூரில் இந்தியா 'ஏ' அணிக்கு எதிராக தலா 3 நாட்கள் கொண்ட போட்டியில் வங்கதேச அணி பங்கேற்கிறது.

இதற்கான இந்திய 'ஏ' அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஏ அணி (3 நாள் போட்டி) : ஷிகர் தவான் (கேப்டன்), அபிநவ் முகுந்த், கருண் நாயர், ஷ்ரேயாஸ் ஐயர், பாபா அபராஜித், நமன் ஓஜா, ஜயந்த் யாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயஸ் கோபால், அபிமன்யு மிதுன், வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே, ஷெல்டன் ஜாக்சன்.

ஒருநாள் போட்டி அணி: உன்முக்த் சந்த் (கேப்டன்), மயங்க் அகர்வால், மணிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், சஞ்சு சாம்சன், கருண் நாயர், குல்தீப் யாதவ், ஜயந்த் யாதவ், கரண் சர்மா, ரிஷி தவண், எஸ்.அரவிந்த், தவல் குல்கர்னி, ரஷ் கலாரியா, குர்கீரத் சிங் மான்.

அணிக்கு திரும்பியுள்ள, ஜடேஜா இதில் சிறப்பாக ஆடினால், ஹர்பஜன் இடத்தை இந்திய டெஸ்ட் அணியில் பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்திய ஏ ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை உன்முக்த் சந்த் தக்கவைத்துள்ள நிலையில் சீனியரான சுரேஷ் ரெய்னாவுக்கு அப்பதவி தரப்படவில்லை என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டிகளில் இந்திய கேப்டன் டோணி, டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 10, 2015, 11:50 [IST]
Other articles published on Sep 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+