Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்.. அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் கோஹ்லியை சேரும்: டோணி

சென்னை: சென்னையில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக விராட் கோஹ்லி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரை கேப்டன் டோணி வெகுவாக பாராட்டினார்.

சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 299 ரன்கள் எடுத்தது. விராட் கோஹ்லி அதிகபட்சமாக 138 ரன்கள் விளாசினார். ரெய்னா அரை சதம் கடந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் கேப்டன் டிவில்லியர்ஸ் சதம் அடித்துகூட பிற வீரர்கள் கை கொடுக்காத நிலையில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

கோஹ்லி ஒரு வல்லவர்

கோஹ்லி ஒரு வல்லவர்

இதுகுறித்து டோணி கூறுகையில், கோஹ்லி தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு வீரர். 50 ரன்கள் அடித்த பிறகு அதை செஞ்சுரியாகவும், சதம் அடித்த பிறகு அதைவிட பெரிய ஸ்கோர் அடிக்கவும் கோஹ்லி விரும்ப கூடியவர்.

கோஹ்லி ஒரு நல்லவர்

கோஹ்லி ஒரு நல்லவர்

இதுபோன்ற பெரிய இன்னிங்ஸ் ஆடும்போது, ஃபீல்டர்களை சிதறவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அடிக்கடி ரன்களை ஓடியதன் மூலம், அந்த பணியை கோஹ்லி சிறப்பாக செய்தார். கடைசி பத்து ஓவர்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதால் ஸ்கோர் செய்வது கடினம். அதை உணர்ந்து ஓடி ரன்களை சேகரித்தார்.

பேட்டிங்கும் வேண்டும்

பேட்டிங்கும் வேண்டும்

5 பவுலர்களுடன் களமிறங்குவது என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம் என்றால், 7வதாக இறங்குவதற்கு ஒரு பேட்ஸ்மேன் வேண்டுமே என்று எண்ணத்தோன்றும். எனவே பேட் செய்யக்கூடிய ஒரு பவுலர் 7வது வரிசையில் களமிறங்க நமக்கு தேவைப்படுகிறார்.

சிங்க குட்டி வந்துடுச்சி

சிங்க குட்டி வந்துடுச்சி

லோவர்-மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய ரெய்னா, தற்போது ஃபார்முக்கு வந்துள்ளார். ஆட்டத்தின் கடைசி போட்டிக்கு முன்பாக ரெய்னா ஃபார்முக்கு வந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். முந்தைய போட்டிகளில் ஆரம்பத்திலேயே அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்தார். சுமார் 15 பந்துகளையாவது சந்தித்த பிறகுதான் அதிரடியை அவர் தொடங்க வேண்டும்.

பலே, பலே பஜ்ஜி

பலே, பலே பஜ்ஜி

அஸ்வின் காயத்தால் வெளியேறிய நிலையில், ஹர்பஜன்சிங் அருமையாக செயல்பட்டு அணியின் நெருக்கடியை குறைத்து வருகிறார். தனது அனுபவம் முழுவதையும் கொண்டுவந்து ஆடி சிறப்பாக நெருக்கடி கொடுத்தார்.

நல்லாத்தான் போகுது

நல்லாத்தான் போகுது

50 ரன்களை விட்டுக்கொடுத்து அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், பிற பவுலர்களுக்கு நெருக்கடி குறைந்தது. தற்போதைய நிலையில் ஹர்பஜன் பந்து வீச்சில் எந்த குறையும் இல்லை. விக்கெட் கீப்பர் என்ற முறையில் என்னால் அதை கவனித்து பார்க்க முடிகிறது. இவ்வாறு டோணி தெரிவித்தார்.

Story first published: Saturday, October 24, 2015, 10:53 [IST]
Other articles published on Oct 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+