Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேட்ச் பிக்சிங் டிவிட்டிற்கு 'ஹார்ட்' போட்ட டோணி... தல இதையெல்லாம் கூடவா லைக் பண்ணுவீங்க?

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் டோணி 3 வருடத்திற்கு பின் டிவிட் ஒன்றை லைக் செய்து இருக்கிறார். அந்த டிவிட்டை ஏன் அவர் லைக் செய்தார் என எல்லோரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

அதேபோல் பலரும் டோணியை டேக் செய்து ஏன் அந்த டிவிட்டை லைக் செய்தீர்கள் என்று கேட்டு வருகின்றனர். எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டும் டோணி இதிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

முன்பு சமூக வலைதளங்களில் சரியாக செயல்படாமல் இருந்தார் டோணி. ஆனால் டோணியின் மகள் ஷிவாவின் வருகைக்கு பின் அடிக்கடி தற்போது இருவரும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்.

டோணியின் இதயம்

டோணி 2009 ஆம் ஆண்டு டிவிட்டரில் இணைந்தார். அதன் பின் கடைசியாக 2014ல் ஒரு டிவிட்டிற்கு ஹார்ட் சிம்பிள் போட்டு இருந்தார். தற்போது மூன்று வருடம் பின்பு ஒரு டிவிட்டை லைக் செய்து உள்ளார். 'இன்கேப்பார்' என்ற இந்தி பத்திரிக்கை போட்டு இருக்கும் இந்த டிவிட்டில் ''உறுதியானது: விராட் கோஹ்லி தலைமையிலான 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிபெறும். மேட்ச் பிக்ஸ் ஆகிவிட்டது.'' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2019ல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்க உள்ளது.

செய்தது ஏன்

இந்த டிவிட்டை டோணி லைக் செய்யும் அளவிற்கு இதில் பெரிய விஷயம் எதுவும் இல்லை. மேலும் அதில் மேட்ச் பிக்சிங் என்ற வார்த்தை வேறு இருக்கிறது. இதையடுத்து டோணி ஏன் அப்படி செய்தார் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். ''நீங்கள் இந்த டிவிட்டை லைக் செய்துள்ளீர்களா? அதில் இருக்கும் மேட்ச் பிக்சிங் என்ற வார்த்தையை கவனிக்கவில்லையா'' என்று கேட்டு இருக்கிறார்.

எந்த தவறும் இல்லை

டோணி செய்ததில் எந்த தவறும் இல்லை என்று சிலர் கூறியுள்ளார். இவர் '' டோணி செய்ததில் எந்த தவறும் இல்லை. அவர் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கிறார். அதனால் லைக் செய்து இருக்கிறார்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

மற்ற டிவிட்கள்

மற்ற டிவிட்கள்

இதற்கு முன்பு 2013 மற்றும் 2014ல் இரண்டு டிவிட்களை டோணி லைக் செய்து இருக்கிறார். 2013ல் ராஜ்தீப் சர்தேசியின் அண்டர் 19 கிரிக்கெட் குறித்த பதிவை லைக் செய்தார். 2014ல் பிசிசிஐ ரஞ்சி கோப்பை குறித்து வெளிட்டு இருந்த ஸ்கோர் டிவிட்டை லைக் செய்து இருக்கிறார்.

Story first published: Friday, December 15, 2017, 13:23 [IST]
Other articles published on Dec 15, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+