Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. அவருடைய பங்களாவை பார்த்திருக்கிங்களா.. இதோ உங்களுக்காக!

Recommended Video

தோனியின் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. அவருடைய பங்களாவை பார்த்திருக்கிங்களா?- வீடியோ

ராஞ்சி: ஒரு ஒண்டிக் குடித்தனத்தில் இருந்து, 7 ஏக்கர் நிலத்தில் அனைத்து வசதிகள் கொண்ட மிகப் பெரிய பங்களா என்பது எவ்வளவு பெரிய வளர்ச்சி. அந்த வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது உழைப்பு. அதுதான் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி.

இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்றவர். 2007ல் உலக டி-20 கோப்பை, 2011ல் ஒருதினப் போட்டிக்கான உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று கோப்பைகளையும் வென்ற மிகவும் வெற்றிகரமான இந்தியக் கேப்டனாக தோனி உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ஒரு 2 அறை அரசு குடியிருப்பில் தங்கியிருந்தவர். ராஞ்சியின் ஹர்மு பகுதியில் தனது முதல் பங்களாவை அவர் கட்டினார். மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அந்த பங்களா அமைந்துள்ளது.

ஆனால் தற்போது அவர் ராஞ்சிக்கு அருகேயே 7 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பங்களாவில் வசித்து வருகிறார். மூன்று ஆண்டுகளில் இந்த பங்களா கட்டி முடிக்கப்பட்டது.

பசுமைக்கு முக்கியம்

பசுமைக்கு முக்கியம்

பச்சை வண்ணத்தை கொட்டியதுபோல் எங்கு பார்த்தாலும் பசுமை. வீட்டுக்கு உள்ளேயும் சிறு செடிகளை வளர்த்து வருகிறார். பார்த்து பார்த்து, ஒவ்வொரு செடி, மரங்களை நட்டு வைத்துள்ளார் தோனி.

மிகப் பெரிய ஃபார்ம் ஹவுஸ்

மிகப் பெரிய ஃபார்ம் ஹவுஸ்

கைலாஷ்பதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபார்ம் ஹவுசில் நீச்சல் குளம், பல்வேறு விளையாட்டுகள் விளையாட இண்டோர் ஸ்டேடியம், பூங்காக்கள், வாகனங்கள் நிறுத்த மிகப் பெரிய வசதி என, நீங்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத வசதிகள் உள்ளன.

பைக்குகள் அணிவகுப்பு

பைக்குகள் அணிவகுப்பு

தோனிக்கு பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த ஃபார்ம் ஹவுசில் அவர் பயன்படுத்தும் பலவிதமான பைக்குகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாய்க்கு படுக்கை

இதைத் தவிர நாய்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார் தோனி. அவருடைய வீட்டில் நான்கு நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அவை சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாய்கள் தூங்குவதற்காக தனியாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பணக்கார வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தோனி, சாதாரண நிலையில் இருந்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் அவருடைய உழைப்பு.

Story first published: Friday, August 10, 2018, 12:53 [IST]
Other articles published on Aug 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+