Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசானாலும் அந்த அழகும், ஸ்டைலும் உன்னை விட்டு போகலை! ஹேண்ட்ஸம் தோனி.. செம ஸ்டைல்.. செம லுக்!

Recommended Video

Dhoni's new hairstyle goes viral | இணையத்தை கலக்கும் டோனியின் புதிய ஹேர்ஸ்டைல்

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் புதிய ஸ்டைலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை "வாவ்" என சொல்ல வைத்துள்ளது.

தோனியை அவரின் ஆரம்ப கால நீளமான முடி முதல், சால்ட் அண்ட் பெப்பர், தாடியுடன் கூடிய வயதான தோற்றம் என பல்வேறு வகைகளில் நாம் பார்த்திருக்கிறோம். இப்போது புதிய ஹேர்கட்டில் இளமையுடன் தோற்றமளிக்கிறார். வாங்க அதையும் பார்ப்போம்.

இரண்டு புகைப்படங்கள்

இரண்டு புகைப்படங்கள்

ஹேர்ஸ்டைலிஸ்ட் சப்னா மோட்டி பவானி என்பவர் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இரண்டிலும் தோனி புதிய தோற்றத்தில் மெர்சல் காட்டுகிறார்.

சூப்பர் தோனி

ட்விட்டர் பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் தோனி ஸ்டைலான ஹேர்கட்டில் காபி குடித்துக் கொண்டு இருக்கிறார். அவர் கையில் சில பேப்பர்கள் உள்ளன. அனேகமாக, தோனி நடிக்கவுள்ள விளம்பரத்திற்கான ஏற்பாடாக இது இருக்கலாம்.

கிளீன் ஷேவில் தோனி

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில், தோனியின் முகம் தெளிவாக தெரிகிறது. இதில் தோனி கலக்கலான தோற்றத்தில் இருக்கிறார். கிளீன் ஷேவ் செய்து, "செம" சொல்ல வைக்கும் ஹேர் கட்டில் ஜொலிக்கிறார்.

முந்தைய தோற்றம்

முந்தைய தோற்றம்

தோனி கடந்த ஆண்டு சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் தாடி வைத்துக் கொண்டு இருந்தார். அது அவருக்கு வயதான தோற்றத்தையும் கொடுத்தது. இடையே மீண்டும் இளமையான தோற்றத்துக்கு மாறினாலும், இந்த இரண்டு புகைப்படங்களில் உள்ள தோனி கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

அடுத்த போட்டி?

அடுத்த போட்டி?

தோனி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளார். முதல் டி20 போட்டி பிப்ரவரி 24 அன்று துவங்குகிறது. ஒருநாள் போட்டி மார்ச் 2 முதல் துவங்க உள்ளது.

Story first published: Saturday, February 16, 2019, 18:04 [IST]
Other articles published on Feb 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+