
பிரியங்கா ஜா
தோனி இந்திய அணிக்கு விளையாடுவதற்கு முன்பே பிரியங்கா ஜா என்ற பெண் மீது ஆசைப்பட்டுள்ளார். சொல்ல போனால் தோனியின் முதல் காதலி இவர்தான். பிரியங்கா தான் தனது வாழ்க்கை என தோனி இருந்த போது தான் அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. பிரியங்கா ஜா ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதன் மூலம் தோனி தனது முதல் காதலியை இழந்தார்.

தீபிகா படுகோனே
தோனி 2007 ஆம் ஆண்டு தோனியின் காதலியாக இருந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் தீபிகா படுகோனே. ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் நடித்து புகழ் உச்சியில் இருந்த தீபிகா படுகோனே தோனியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றார். இன்னும் சொல்லப்போனால் தீபிகா தான் தோனியின் முடியை வெட்ட சொன்னது என்று பல தகவல்களும் வெளியாகின.

ப்ரீத்தி
தோனியின் கேர்ள் பிரண்ட் லிஸ்டில் அடுத்ததாக இருப்பது ப்ரீத்தி என்ற பெண்மணி தற்போது நகைச்சுவை கலைஞர் கபில் சர்மாவின் காதலியாக பிரீத்தி இருக்கிறார். ப்ரீத்தி தோனியும் பலமுறை பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்திருக்கிறார்கள். இருவரும் தங்களது திருமணத்தை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்து சென்று விட்டார்கள்.

லட்சுமி ராய்
தோனியின் அடுத்த காதலி பிரபல தமிழ் நடிகை லட்சுமி ராய். 2009 ஆம் தோனியை நீங்கள் லட்சுமி ராய் இல்லாமல் தோனியை தனியாக பார்க்க முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய காலத்தில் இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள். தோனியை திருமணம் செய்ய லட்சுமி ராய் ஓப்பனாகவே விருப்பம் தெரிவித்தார்.ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை. இந்தப் பட்டியலில் அடுத்து இருப்பவர் பிரபல நடிகை அசின். கஜினி திரைப்படம் மூலம் ஹிந்தியில் பிரபலமாக அசின் இருந்தார்.

அசின்
இந்த நிலையில் அசினுக்கும் தோனிக்கும் காதல் மலர்ந்தது. யாரிடமும் சிக்காத தோனி அசினிடம் சிக்கிவிட்டார் என ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன. அசின் பெற்றோர் இருக்கும்போது தோனி அவர்களது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததும் இதனை உறுதிப்படுத்தியது. ஆனால் எதிர்பாராத விதமாக இவர்களுடைய காதலும் பிரிந்தது. இதனை அடுத்து தான் தாம் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அதே பள்ளியில் முதலாம் வகுப்பு படித்த சாக்ஸியை பிற்காலத்தில் தோனி சந்தித்து திருமணம் செய்து கொண்டார். காதல் தோல்வியில் முடிந்தால், மனம் தளராமல் தோனி போல் போராடுங்கள்.உங்களுக்கும் ஒரு ஷாக்சி கிடைப்பார்.


Click it and Unblock the Notifications