For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராவோவுக்கு ஸ்டிரைக் சான்ஸ் கொடுக்காமல் தப்பு பண்ணின தோனி..! விளாசும் கிரிக்கெட் வல்லுநர்கள்

சென்னை:பெங்களூரு அணிக்கு எதிராக, 19வது ஓவரில் ரன்களை எடுக்காமலும், பிராவோவுக்கு வாய்ப்பு கொடுக்காமலும் இருந்தது தோனி செய்த தவறு என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீசியது.20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து ஆடிய சென்னை அணி 28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. ராயுடு 29 ரன்கள் எடுத்த நிலையில் தோனி நிதானமாக நின்று ரன்களை சேர்த்தார்.

அந்த 2-3 ரன் பற்றி நீங்க கணக்கு போடலாம்.. ஆனா தோனி சொல்லும் கணக்கு வேற.. தோல்விக்கு காரணம் என்ன? அந்த 2-3 ரன் பற்றி நீங்க கணக்கு போடலாம்.. ஆனா தோனி சொல்லும் கணக்கு வேற.. தோல்விக்கு காரணம் என்ன?

1 ரன்னில் வெற்றி

1 ரன்னில் வெற்றி

வெற்றிக்கு 26ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் தோனி 24 ரன்களை விளாசினார். கடைசி பந்தில் தாகூர் ரன்அவுட் ஆனதால் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

தோனி செயலால் தோல்வி

தோனி செயலால் தோல்வி

தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தாலும், அவரின் சில செயல்பாடுகளால் சென்னை அணி தோல்வியை சந்திக்க நேரிட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இறுதிக்கட்டத்தில் அவர் செய்த ஒரு செயலால் ஒரு ரன்னில் அணி தோற்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

3 ஓவர், 49 ரன்கள்

3 ஓவர், 49 ரன்கள்

இது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியதாவது:அதாவது.. இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை எடுத்தார். கடைசி 3 ஓவர்களில் 49 ரன்கள் தேவை. கொஞ்சம் கடினமான இலக்கு.

வெற்றி வாய்ப்பு இருந்தது

வெற்றி வாய்ப்பு இருந்தது

அப்போது தோனி களத்தில் நிற்பதால் சென்னைக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அதுக்கு ஏற்றாற்போல் 18வது ஓவரில் 13 ரன்கள் வந்தது. மீதி 2 ஓவர்கள்.. எடுக்க வேண்டியது 36 ரன்கள்.

ஓடாத தோனி

ஓடாத தோனி

அப்போது தோனி 19வது ஓவரில் 3 பந்துகளை டாட் பால் ஆக்கினார். அந்த 3 பந்துகளும் சிங்கிள் ரன் எடுக்கவேண்டிய பந்துகளாகும். ஆனால், தோனி சிங்கிள் எடுக்க தவறினார் மறுபுறம் பிராவோ இருந்தும் அவர் ரன் ஓடவில்லை.

தோனியின் சுயநலம்

தோனியின் சுயநலம்

சுயநலமாக தோனி ஏன் அப்படி சிந்தித்து செயல்பட்டார்? பிராவோ நல்ல ஹிட்டர். அவரிடம் ஒரு சிங்கிள் ஓடி இருந்தால் அவரும் சிக்ஸ் அடித்திருக்கலாம். ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும்.

திருப்புமுனை அவுட்

திருப்புமுனை அவுட்

ஆனால், தோனி அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் அவரே அடிக்கவேண்டும் என்று நினைத்தது எந்த எண்ணத்தில் சரியானது என்று புரியவில்லை. அந்த ஓவரின் 5 ஆவது பந்தை தோனி ஒரு ரன் எடுக்க கடைசி பந்தில் பிராவோ ஆட்டமிழந்து வெளியேறினார். இது போட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஆட்டம் மாறியிருக்கும்

ஆட்டம் மாறியிருக்கும்

தனது அனுபவத்தை பலமாக கொண்ட தோனி அந்த ஓவரின் 5 பந்துகளில் 4,6,6,2,6 என மொத்தம் 24 ரன்களை குவித்தார். பிராவோவுக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தால் ஆட்டம் சென்னையின் பக்கம் ஜெயமாகி இருக்கும் என்று கூறி இருக்கின்றனர்.

தோல்விடைய காரணம்

தோல்விடைய காரணம்

கடைசி பந்தில் ஓடி, தாகூர் ரன் அவுட்டாகும் நிலையும் உருவாகி இருக்காது. அப்போது ஓடிய தோனி... அந்த 3 பந்துகளில் ஓடாமல் ரன் குவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதோ தோல்விக்கு காரணம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

Story first published: Monday, April 22, 2019, 13:43 [IST]
Other articles published on Apr 22, 2019
English summary
Dhoni made a blender mistake for not giving strike to bravo against RCB match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X