Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிக்கத் துரத்திய தோனி... மிரண்டு போன ஜடேஜா... ஐபிஎல்லில் காமெடி!

Recommended Video

மைதானத்தில் ஜடேஜாவுடன் விளையாடிய தோனி

புனே: ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனி பந்தால் அடிக்கத் துரத்த, அருகில் இருந்த ஜடேஜா மிரண்டு போனார்.

ஐபிஎல்லில் நேற்று நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராயுடு அபாரமாக சதமடிக்க சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Dhoni made jadeja scaring in the IPL

முதலில் ஹைதராபாத் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் 7வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். அப்போது ஹைதராபாத்தின் ஷிகார் தவான் பந்தை இடது பக்கம் அடித்துவிட்டு ரன் ஓடினார்.

அருகே பீல்டர் இல்லாததால், கீப்பரான மகேந்திர சிங் தோனி, ஓடிச் சென்று பந்தை எடுத்தார். அப்போது ஜடேஜாவும பந்தை பிடிப்பதற்காக ஓடி வந்தார்.

பந்தை கையில் எடுத்த தோனி, ஜடேஜா மீது எறிவதுபோல் சைகை செய்தார். உண்மையாகவே பந்தை எறிகிறார் என்று ஜடேஜா ஒதுங்கினார்.

இருவரும் சிரித்தபடியே சென்றனர். இந்த வீடியோதான் தற்போது சமூகதளங்களில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மிகவும் முக்கியமான போட்டியாக இருந்தபோதும், பதற்றம் அடையாமல் எப்படி விளையாட வேண்டும் என்பதை தோனி மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஐபிஎல்லில் நடந்துள்ள இந்த காமெடி வீடியோ தற்போது வேகமாக பரவி, தோனியை ஏன் கேப்டன் கூல் என்று அழைக்கிறோம் என்பதற்கு மற்றொரு உதாரணமாகி உள்ளது.

Story first published: Monday, May 14, 2018, 19:03 [IST]
Other articles published on May 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+