For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷாந்த் சர்மா செய்த காரியம்.. கடுப்பில் ஜடேஜாவை கண்டமேனிக்கு திட்டிய தோனி.. ஐபிஎல் சம்பவம்!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரில் தோனிக்கே செம பதிலடி கொடுத்த சம்பவத்தை பற்றி சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா.

Recommended Video

Ishant Sharma reveals Dhoni make fun of him over hitting sixes

2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தோனி கிண்டல் அடித்தது அவருக்கே பாதிப்பாக அமைந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பாவி ஜடேஜா திட்டு வாங்கியது தான்.

மனசு ஒரு மொபைல் ஆப் போல... தேவையற்றவற்றை அன்இன்ஸ்டால் செய்யுங்க மனசு ஒரு மொபைல் ஆப் போல... தேவையற்றவற்றை அன்இன்ஸ்டால் செய்யுங்க

2019 ஐபிஎல் பிளே - ஆஃப்

2019 ஐபிஎல் பிளே - ஆஃப்

2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் முதல் இடம் பெற்று பிளே - ஆஃப் சென்றது. அதில் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது சிஎஸ்கே. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி கேபிடல் ஆட்டம்

டெல்லி கேபிடல் ஆட்டம்

அந்த அணியின் துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா 5, ஷிகர் தவான் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். மன்றோ 27, ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் மடஊமே ஆறுதல் அளித்தார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

ரிஷப் பண்ட் 38 ரன்கள் எடுத்தார். பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். 19 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட்கள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. எப்படியும் 140 ரன்களை தாண்டாது என்றே பலரும் எண்ணினர்.

இஷாந்த் மீது எதிர்பார்ப்பு

இஷாந்த் மீது எதிர்பார்ப்பு

20வது ஓவரில் இரண்டாவது பந்தில் ட்ரென்ட் பவுல்ட் ஒரு சிக்ஸ் அடித்தார். அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து இருந்தார். அதே போன்ற ஒரு ஆட்டத்தை அவருக்கு அடுத்து வந்த இஷாந்த் சர்மாவும் ஆடினால் போதும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

தோனி கிண்டல்

தோனி கிண்டல்

அந்த நிலையில், இஷாந்த் சர்மா கடைசி ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்டார். ஜடேஜா வீசிய அந்த பந்தில் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. அப்போது கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனி, "உன்னால் சிக்ஸ் அடிக்க முடியாது. உனக்கு அந்த அளவுக்கு சக்தி இல்லை" என கிண்டல் செய்துள்ளார்.

ஏறி வந்து ஃபோர்

ஏறி வந்து ஃபோர்

அதற்கு அடுத்த ஐந்தாவது பந்தை சந்திக்கும் முன் கிரீஸை விட்டு ஒரு அடி ஏறி நின்றார் இஷாந்த் சர்மா. பந்து பிட்ச் ஆகும் இடம் வரை முன்னேறி, வேகமாக பந்தை அடித்தார். பந்து ஃபோர் சென்றது. ஆனால், தோனி கிண்டல் செய்தது சிக்ஸ் அடிப்பது பற்றித் தானே.. அதையும் செய்து காட்டினார் இஷாந்த்.

அந்த சிக்ஸ்

அந்த சிக்ஸ்

கடைசி ஓவரின் கடைசி பந்து, முந்தைய பந்தைப் போலவே ஏறி வந்து லாங்-ஆஃப் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் இஷாந்த் சர்மா. 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். அது மட்டுமில்லை, ஐபிஎல் தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். டெல்லி அணி அவரது இந்த அதிரடி ஆட்டத்தை கண்டு உற்சாகம் அடைந்தது. அந்த அணி 147 ரன்கள் எடுத்தது.

திட்டு வாங்கிய ஜடேஜா

திட்டு வாங்கிய ஜடேஜா

140 ரன்களுக்குள் சுருட்டலாம் என கணக்கு போட்ட தோனி தன் வாயாலேயே அதை கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஜடேஜா சரியாக பந்து போடவில்லை என அந்த சிக்ஸருக்கு பின் அவரை திட்டினார் தோனி. அப்போது பதிலடி கொடுத்த களிப்பில், தோனியை திரும்பி பார்த்து இருக்கிறார் இஷாந்த் சர்மா.

செம பதிலடி

செம பதிலடி

ஐபிஎல் வரலாற்றில் இது போன்ற பல சுவாரசியமான பதிலடி சம்பவங்கள் நடந்து இருந்தாலும், இது யாருக்கும் தெரியாத சம்பவம் ஆகும். இஷாந்த் சர்மாவே இதை இப்போது கூறி இருப்பதால் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. இஷாந்த் சர்மா அவரது அணிக்கு உதவி இருந்தாலும், டெல்லி அணியால் வெற்றி பெற முடியவில்லை.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

அந்த முக்கியமான தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டுபிளெசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் அரைசதம் அடித்தனர். சிஎஸ்கே அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எளிதாக கடந்தது. 2019 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 20, 2020, 17:09 [IST]
Other articles published on Apr 20, 2020
English summary
Dhoni make fun of Ishant Sharma over hitting sixes and got a reply from Ishant within few minutes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X