Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி 2020ல் தான் ஓய்வு பெறுவார்... அடித்து சொல்லும் சோதிடர்..! ஏக குஷியில் ரசிகர்கள்

சென்னை: 2020ம் ஆண்டு அக்டோபரில் தான் தோனி தமது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று சோதிடர் பாலாஜி ஹாசன் கணித்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே, இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்திடம் தோற்கும். கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருது வெல்வார் என்று சோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துக் கூறியிருந்தார்.

Dhoni may announce his retirement in 2020 says astrologer balaji hasan

அவரது கணிப்பு அப்படியே நடந்திருப்பது அனைவர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திடீரென பிரபலமான அவரின் கணிப்புகளை அரசியல் வாதிகள் முதற்கொண்டு, சாதாரண வெகுஜன மக்களும் உற்று பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

உலக அரசியல், உள்ளூர் அரசியல், நாட்டு நடப்பு என்று புட்டுபுட்டு வைக்கும் பாலாஜி ஹாசன் கிரிக்கெட் பற்றியும் பல கணிப்புகளை கூறியிருந்தார். மற்ற கணிப்புகள் எப்படியோ... தோனி பற்றிய அவர் கணிப்பு தான் இப்போதைக்கு டாப். பாலாஜி ஹாசன் கணிப்புகளை தல தோனி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவர் கூறியது இதுதான்: தோனி இப்போதைக்கு ஓய்வு பெறும் வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் அவரது ஜாதகப்படி லக்னாதிபதி தனுசு இருப்பார். அந்த தனுசு ராசி இருக்கும் வரை தோனியை ஒன்றும் செய்ய முடியாது. அக்டோபரில் குரு பெயர்ச்சி வருகிறது.

எனவே, 2019ம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தான் அவர் ஓய்வினை அறிவிக்க வாய்ப்பு உண்டு. அப்படி இல்லை என்றால் 2020ம் ஆண்டு அக்டோபரில் தான் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பார். இன்றோ, நாளையோ திடீரென ஓய்வினை அறிவிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, July 19, 2019, 13:36 [IST]
Other articles published on Jul 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+