நீங்க அவருக்கு பயிற்சி கொடுங்க.. தோனிக்கு இப்போதே அசைன்மெண்ட் கொடுத்த பிசிசிஐ.. மாஸ் திட்டம்!
Recommended Video
டெல்லி: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனிக்கு பிசிசிஐ புதிய அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்து இருக்கிறது. பல எதிர்கால திட்டங்களை மனதில் வைத்து பிசிசிஐ செயல்பட்டு வருகிறது.
இந்தியா மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் நடக்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்குள் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் செல்ல போகும் இந்திய வீரர்கள் யார், யார், 15 பேர் கொண்ட அணி எது என்று நாளை முடிவு எடுக்கப்பட உள்ளது. நாளை மாலை இந்திய அணி அறிவிக்கப்படும்.

தோனி இல்லை
இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் செல்ல போகும் இந்திய வீரர்கள் லிஸ்டில் கண்டிப்பாக தோனி இருக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். 11 பேர் கொண்ட லிஸ்டில் மட்டுமல்ல 15 பேர் கொண்ட லிஸ்டிலும் தோனி இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால்
ஆனால் மேற்கு இந்திய தீவுகள் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் தோனியும் உடன் செல்வார் என்று கூறுகிறார்கள். தற்போது இந்திய அணி வீரர்கள் பேட்டிங் கோச் இல்லாமல் மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் இருக்கிறார்கள்.

ஏன் இல்லை
ஆனால் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கரின் பதவிக்காலம் நீடிக்கப்படவில்லை. இதனால் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் பயிற்சியாளர் இல்லாமல் செல்கிறார்கள். ஆகவே தோனி இந்திய வீரர்களுக்கு பேட்டிங் சார்ந்த அறிவுரையை இந்த தொடரில் வழங்க போகிறார் என்கிறார்கள்.

என்ன பயிற்சி
அதேபோல் இந்திய அணியின் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்டிற்கு தோனி பயிற்சி அளிக்க இருக்கிறார். இதுதான் தற்போது பிசிசிஐ தோனிக்கு கொடுத்திருக்கும் டாஸ்க் ஆகும். இந்திய அணியில் சில வீரர்களை நிலையான இடத்திற்கு கொண்டு செல்ல தோனி உதவ போகிறார் என்கிறார்கள்.

அறிவுரை
பொதுவாகவே தோனி டிப்ஸ் வழங்குவதில் வல்லவர். இதனால் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் கீப்பிங் டிப்ஸ் வழங்க அவர் மேற்கு இந்திய தீவுகள் செல்கிறார். எதிர்காலத்தில் அவர் பயிற்சியாளர் ஆக கூட வாய்ப்புள்ளது. அதற்கு ஒரு முன்னேற்பாடாக இது இருக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications