For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

40 கோடி ரூபாய் ஏமாந்துட்டேன்... வாங்கி கொடுங்க... உச்ச நீதிமன்றத்தில் கேஸ் பேட்ட நம்ம தல தோனி

டெல்லி:தனக்கு வழங்கவேண்டிய 40 கோடி ரூபாய் பணத்தை தராமல் இழுத்தடித்து வருவதாக, கட்டுமான நிறுவனமான அமரபலி குழுமம் மீது, இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2009ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி அமரபலி என்ற நிறுவனத்திடம் அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாprட்டராக இருக்க ஒப்பந்தம் மேற்கொண்டார். ஒப்பந்தப்படி அந்த நிறுவனத்தின் கட்டிடங்களுக்கு மார்கெட்டிங் மற்றும் பொது தொடர்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காவும் ஒப்பந்தம் மேற்கொண்டார்.

Dhoni moves supreme court against amrapali over Rs 40 crore dues

தோனி அந்நிறுவனங்களுக்காக நடித்த விளம்பரங்களும் வெளியிடப்பட்டது. இந் நிலையில், 2016ம் ஆண்டு அந்நிறுவனம் வீடு வாங்கியவர்களுக்கு வீடு கொடுப்பதாக ஒப்பந்தமிட்டிருந்தது. ஆனால்.. வீட்டை வழங்காமல் இழுத்தடித்து உள்ளது.

அதனால் பலர் நீதிமன்றம் சென்றனர். இதுவரை அந்நிறுவனத்தால் வீடு வழங்குவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரமாகும். இந்நிலையில் அவர்களை போல தோனியும் தற்போது அமரபலி நிறுவனம் செய்த ஒப்பந்தப்படி ரூ38.95 கோடி தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அந்த தொகைக்கு ஈடாக அந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள நிலத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்நிறுவனம் மொத்தம் ரூ 22.53 கோடி தர வேண்டும் அதற்கு ஆண்டிற்கு 18 சதவீத வட்டியுடன் ரூ38.95 கோடி பாக்கியுள்ளது. அதை பெற்று தர வேண்டும் என்று அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Story first published: Wednesday, March 27, 2019, 23:45 [IST]
Other articles published on Mar 27, 2019
English summary
Dhoni moves supreme court against amrapali over Rs 40 crore dues.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X