அந்த தப்பை மட்டும் தோனி செய்ய மாட்டார்.. சிஎஸ்கே அணியில் புதிய ரோல் உறுதி.. கணித்த ஜாம்பவான்!
சென்னை: அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக மட்டுமே தோனி செயல்படுவார் என்று அஸ்வின் கணிப்பை வெளியிட்டுள்ளார். தோனி மற்றும் ஜாகீர் கான் பயிற்சியாளர் ரோலை எடுக்கும் போது, ருதுராஜ் கெய்க்வாட் ஆலோசனைக்கு யாரிடம் செல்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
2027 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் தோனி ஒரு வீரராகவே இருப்பார் என்று அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறி இருந்தார். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரின் போதே தோனி மைதானத்திற்கு கூட வரவில்லை. தோனியின் வருகை வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் தோனி தனது கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டதாகவே தெரிகிறது. தோனி ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டார். அடுத்த சீசனில் தோனி ஓய்வு பெற்றால், அந்த பணத்தை சிஎஸ்கே அணியால் மினி ஏலத்தில் பயன்படுத்த முடியும். இதனால் தோனியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் தொடங்கி அத்தனை முடிவுகளையும் தோனி எடுக்க தொடங்கி இருக்கிறார். இதுதொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழு மாற்றம் அடைந்துள்ள நிலையில், தோனி - ஜாகீர் கான் - ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும்.
நிச்சயமாக தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக இருப்பார் என்று கருதுகிறேன். அதேபோல் தோனி மற்றும் ஜாகீர் கான் இருக்கும் போது, ருதுராஜ் கெய்க்வாட் யாருடன் ஆலோசனை செய்வார் என்பதை காணவும் ஆவலாக உள்ளேன். இதற்கு ஃபிளமிங் தோனிக்கு மிகச்சிறந்த இணையாக இருந்தார். அதேபோல் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் உடன் 3 ஆண்டுகள் இருந்த போதும், அவரால் இணைந்து செயல்பட முடியாதது ஆச்சரியம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
