அவெஞ்சர்ஸ் போல் ஹீரோவான தோனி..!! விரைவில் அமேசானில் வெளியாகும் தோனியின் அவதாரம்.. டிரைலர் இதோ..!!
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பல அவதாரங்கள் உள்ளன. தற்போது அவெஞ்சர்ஸ் போல் புதிய சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
ஆம், மார்வெல் காமிக்ஸ் போல் தோனியின் சொந்த நிறுவனம் ஒன்று காமிக்ஸ் தயாரித்துள்ளது. காமிக்ஸ் என்றால் புத்தகமாக தானே வரும்.
ஆனால் இது அனிமேஷனாக வெப் சீரிஸ் போல் அமேசானில் வெளிவர உள்ளது. தற்போது இதன் டிரைலரை தோனி வெளியிட்டுள்ளார்.

தோனியின் நிறுவனம்
தோனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி எண்டர்டைமன்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் சென்னை அணி 2018ஆம் ஐ.பி.எல். பட்டத்தை வென்றது தொடர்பாக டாக்குமெண்டரியை தயாரித்து ஹாட் ஸ்டாரில் வெளியிட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

தமிழர் எழுதிய கதை
இதனையடுத்து அந்த நிறுவனத்தின் அடுத்த படைப்பாக தோனியை வைத்து வெப் சீரிஸை தயாரிக்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தோனியின் மனைவியுமான ஷாக்சி தோனி தெரிவித்தார். ரமேஷ் தமிழ்மணி என்ற தமிழர் கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு நாவலை எழுதினார். அதில் பண்டைய காலத்தில் மையமாக வைத்தும், அறிவியல் ரீதியாகவும் (ஏழாம் அறிவு போல் தான்) அமைக்கப்பட்டுள்ள கதையில் தோனி நடிக்க உள்ளதாக அப்போதே அறிவிக்கப்பட்டது.

என்ன கதை?
அதர்வா என்று பெரியடப்பட்டுள்ள இந்த அனிமேஷன் காமிக்சில் தோனி ஒரு அகோரியாக நடக்கிறார். அகோரியாக இருக்கும் தோனியை பிடித்து ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்கிறார். அப்போது பண்டைய காலத்தில் அகோரியின் சக்தி, வரலாறு தோனியின் மூலம் வெளிப்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை.

டிரைலர் வெளியீடு
இந்த கதை விறுவிறுப்பாகவும், புதியதாகவும் இருந்ததால் தான் இதனை தேர்வு செய்து அணிமேஷன் வெப் சீரிசாக எடுத்ததாக ஷாக்சி தோனி கூறினார். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவின் போர் வீரர் உடையில் போல் உள்ள தோனி, தீய சக்திகளை எதிர்த்து போராடுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இதனை தோனி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications