Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க இது.. தோனி முடியை காணோம்.. இதுவும் நல்லாத்தான் இருக்கு.. வைரலாகும் தோனியின் புதிய ஸ்டைல்!

மும்பை : இந்திய அணியில் இருந்து இரண்டு மாத காலம் ஓய்வு எடுத்துக் கொண்ட தோனி, ஜெய்ப்பூரில் புதிய ஸ்டைலில் காட்சி அளித்தார்.

தோனியின் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருந்தார் தோனி.

இராணுவப் பணி

இராணுவப் பணி

தோனி இரண்டு மாத காலம் ஓய்வில் சென்று வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடுவதை தவிர்த்தார். அண்ட் இரண்டு மாதங்களில் சுமார் 16 நாட்கள் இந்திய இராணுவத்தில் பணி ஆற்றினார். சுதந்திர தினம் வரை இராணுவ வீரர்களுடன் நேரம் செலவிட்ட தோனி, அவர்களை ஊக்கப்படுத்தினார்.

ஒரே பிஸி

ஒரே பிஸி

அடுத்து இராணுவத்தில் இருந்து திரும்பியவர் பயங்கர பிஸியாகி இருக்கிறார். ஆம், தினமும் ஒரு புது விளம்பர ஷூட்டிங் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன.

ஜெய்ப்பூர் சென்றார்

சமீபத்தில் ஜெய்ப்பூர் சென்றார் தோனி. அங்கே தோனி வருகிறார் என்ற உடன் ரசிகர் கூட்டம் உடனடியாக கூடி விட்டது. அங்கே தான் தோனியின் புதிய ஸ்டைல்-ஐ கண்டுள்ளனர் ரசிகர்கள்.

ரசிகர் கூட்டம்

ரசிகர் கூட்டம்

இதற்கிடையே, ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து தோனியை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தோனியும் ரசிகர்களிடம் வழி விடுமாறு கேட்டுக் கொண்டே சென்றார்.

வீடியோவில் புது ஸ்டைல்

அப்போது தோனியை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் தோனி தலையில் கருப்பு நிற பந்தனா அணிந்து காட்சி அளிக்கிறார். முடியை மறைத்துக் கொண்டு இருக்கும் அவரது ஸ்டைல் அவரது ரசிகர்கள் இடையே பரவி வருகிறது,

மீண்டும் கிரிக்கெட் ஆடுவாரா?

இந்த ஸ்டைல் எல்லாம் ஒருபுறம் இருக்க, தோனி மீண்டும் கிரிக்கெட் ஆடுவாரா? என்பதே அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என செய்தி பரவிய நிலையில், அதன் பின் தோனி எந்த ஓய்வும் அறிவிக்கவில்லை.

சேவாக் கருத்து

சேவாக் கருத்து

அதே சமயம், அவரை இந்திய அணியில் இனி தேர்வு செய்ய மாட்டார்கள் என்ற பேச்சும் உள்ளது. சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் இது குறித்து கருத்து கூறி உள்ளனர். தேர்வுக் குழு தோனியிடம் கேட்டு விட்டே எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என சேவாக் கூறி இருக்கிறார்.

துரத்தும் சர்ச்சைகள்

துரத்தும் சர்ச்சைகள்

உலகக்கோப்பை தொடரில் தோனி நிதானமாக ஆடினார் என்பது ஒருபுறம் சர்ச்சை ஆனது என்றால், தோனி விரலில் லேசான எலும்பு முறிவுடன் ஆடினார் என சமீபத்தில் வெளியான ஒரு தகவல் அதை விட பெரிதாக இருந்தது. அம்ரப்பலி நிறுவன வழக்கு விவகாரத்திலும் தோனி குறித்து சர்ச்சையான தகவல்கள் வெளியானது.

ரிஷப் பண்ட் சரியில்லை

ரிஷப் பண்ட் சரியில்லை

இந்த நிலையில், தோனிக்கு மாற்றாக அணியில் இடம் பெற்ற ரிஷப் பண்ட் சரியாக ஆடாததால், அவரை நீக்கி விட்டு மீண்டும் தோனியை அணியில் ஆட வைக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

Story first published: Sunday, August 25, 2019, 15:23 [IST]
Other articles published on Aug 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+