For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முடிந்தது தோனி சகாப்தம்? இதுக்கு மேல எங்களால முடியாது.. செம ஷாக் கொடுத்த பிசிசிஐ!

மும்பை : தோனி ஓய்வு பற்றிய பேச்சுக்கள் அதிகரித்து வரும் நிலையில், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ 2019 - 2020ஆம் ஆண்டுக்கான தேசிய அணி வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது.

அந்தப் பட்டியலில் பல இளம் வீரர்கள் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மூத்த வீரர் தோனியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு ஊகங்களை கிளப்பி விட்டுள்ளது.

ஊகம்

ஊகம்

தோனியின் பெயர் ஒப்பந்தத்தில் இடம் பெறாததால் அவர் விரைவில் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு உள்ளது என சிலர் கூறி வருகின்றனர். சிலரோ, அவர் கடந்த ஆண்டில் சுமார் ஆறு மாதம் போட்டிகளில் பங்கேற்காததால் பெயர் நீக்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

தோனி விடுப்பு

தோனி விடுப்பு

தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் எந்த கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் கூட அவர் ஆடவில்லை. அடுத்து அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்பது மட்டுமே உறுதியான செய்தியாக உள்ளது.

தொடர் வதந்தி

தொடர் வதந்தி

அவர் விடுப்பில் இருப்பதால் தொடர்ந்து தோனி விரைவில் ஓய்வு பெறப் போகிறார் என்ற வதந்தி கிளம்பி வருகிறது. அவரது எதிர்கால முடிவு என்ன என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

இந்திய அணி முடிவு

இந்திய அணி முடிவு

இந்திய அணி நிர்வாகம் தோனி பற்றி கூறுகையில், அவர் ஐபிஎல் தொடரில் ஆடி தன்னை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறி இருக்கிறது.

ஜனவரி செய்தி இதுதானா?

ஜனவரி செய்தி இதுதானா?

தோனி தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது பற்றி கூறுகையில், "ஜனவரி வரை எதுவும் கேட்காதீர்கள்" என்றார். அதனால், ரசிகர்கள் ஜனவரியில் விடை கிடைக்கும் என காத்திருந்தனர். அவர்களுக்கு பிசிசிஐ "கெட்ட செய்தியை" கூறி உள்ளது.

ஒப்பந்தம் அறிவிப்பு

ஒப்பந்தம் அறிவிப்பு

அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான ஓராண்டு பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா முதல் இளம் வீரர்கள் ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், வாஷிங்க்டன் சுந்தர் வரை 27 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

பெயர் இல்லை

பெயர் இல்லை

இந்தப் பட்டியலில் தோனி பெயர் இடம் பெறவில்லை. இது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தோனி இந்திய அணிக்கு தான் ஆடிய முதல் வருடம் முதல் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு பிரிவு

நான்கு பிரிவு

இந்த ஒப்பந்தத்தில் ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் வீரர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. தோனி சில ஆண்டுகளுக்கு முன் ஏ+இல் இருந்து ஏ பிரிவுக்கு தள்ளப்பட்டார். தற்போது ஒட்டுமொத்தமாக பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

தோனி பெயர் நீக்கப்பட்டுள்ள நிலையில், பல இளம் வீரர்களின் பெயர்கள் பட்டியலில் முதன்முறையாக இடம் பெற்றுள்ளன. நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் முதன்முறையாக பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.

பண்டியா பெயர் உள்ளது

பண்டியா பெயர் உள்ளது

தோனி அணியில் ஆடாத அதே காலகட்டத்தில், சுமார் நான்கு மாதங்களுக்கும் மேல் காயம் காரணமாக ஹர்திக் பண்டியா அணியில் இடம் பெறவில்லை. அவரது பெயர் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 16, 2020, 15:39 [IST]
Other articles published on Jan 16, 2020
English summary
Dhoni not given BCCI contract in 2019-20. Is it end of Dhoni era?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+