Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீழ்கிறது 'கூல் கேப்டன்' விளம்பர ஆதிக்கம்.. டோணியை கை கழுவி, கோஹ்லியுடன் கை கோர்த்த பெப்சி!

சென்னை: டோணியுடன் நீடித்து வந்த 11 வருட கால விளம்பர ஒப்பந்தத்தை, இப்போது ரத்து செய்துள்ளது பெப்சி நிறுவனம்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டனாக உள்ளவர் மகேந்திரசிங் டோணி.

Dhoni out, Virat Kohli in as PepsiCo Icon

விளம்பரங்கள் மூலம் கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருபவர் இவர். சமீப காலமாக விளம்பரங்களை ஈர்ப்பதில், டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் இவருக்கும் கடும் போட்டி உள்ளது.

டோணி விளம்பர போட்டியில் பின்தங்க தொடங்கியுள்ளார். விராட் கோஹ்லி அளவுக்கு, டோணி தற்போது திறமையாக செயல்பட முடியவில்லை என்பது கண்கூடாக தெரிவதும் ஒரு காரணம்.

இந்த சூழ்நிலையில், முக்கிய திருப்பமாக டோணியை பெப்சி கோ நிறுவனம் கை கழுவி உள்ளது. அவருடன் இருந்துவந்த, 11 ஆண்டு கால ஒப்பந்தத்தை பெப்சி முடித்துக் கொண்டுள்ளது.

2005ம் ஆண்டில் இருந்து பெப்சி விளம்பரத்தில் டோணி நடித்து வந்தார். இதேபோல லேஸ் சிப்ஸ் விளம்பரத்திலும் இனிமேல் டோணியை பார்க்க முடியாதாம்.

அதே நேரம் விராட் கோஹ்லி, பெப்சி விளம்பரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். நடிகர் ரன்பீர் கபூர், நடிகை பர்னிதி சோப்ரா ஆகியோரும் பெப்சி விளம்பரத்தில் நடித்து வருகிறார்கள்.

Story first published: Monday, August 29, 2016, 15:12 [IST]
Other articles published on Aug 29, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+