உலக கோப்பையில் கங்குலி குரூப் படைத்த சாதனையை முறியடித்த டோணி அண்ட் கோ!
ஹாமில்டன்: அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி புது வரலாறு படைத்துள்ளது.
உலக கோப்பை பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இதுவரை தான் சந்தித்த பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, யு.ஏ.இ, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று அயர்லாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது. நடப்பு உலக கோப்பை தொடரில் மோதிய முதல் 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து 9 போட்டிகள்
மேலும், உலக கோப்பை தொடர்களில் தொடர்ந்து 9 போட்டிகளில் வென்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2011 உலக கோப்பையின்போது, சென்னையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றிக்கு பிறகு, இந்த உலக கோப்பையின் முதல் 4 போட்டிகளில் வெற்றி வெற்றிகளையும் சேர்த்தால், இந்தியா தொடர்ந்து 8 வெற்றிகளை பெற்று அசத்தியிருந்தது.

இன்று மைல்கல்
அயர்லாந்துக்கு எதிரான, இன்றைய வெற்றியையும் சேர்த்தால் இந்தியாவின் வெற்றிப் பயணம், 9 போட்டிகளாக அதிகரித்துள்ளது.

கங்குலி குரூப்
2003ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையில், சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 8 போட்டிகளில் வென்றிருந்த சாதனையை, டோணி தலைமையிலான தற்போதைய அணி முறியடித்துள்ளது.

டோணி அண்ட் கோ
கங்குலி தலைமையிலான அணி, ஒரே தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தது. டோணி அண்ட் கோ, இரு உலக கோப்பைகளையும் சேர்த்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications