பல கோடி காசு இருந்தும்.. அவர் போனை பாருங்க.. திடீரென வைரலாகும் தோனியின் போட்டோ.. எவ்வளவு எளிமை
டெல்லி: இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனியின் புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் இளம் பவுலர் சாஹலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவருக்கும் தனுஸ்ரீ என்ற மாடல் பெண்ணிற்கும் திருமணம் நடந்தது.
ஆஸ்திரேலிய தொடரில் டி 20 போட்டிகள் வரை ஆடி வந்த சாஹல் இதற்காக இந்தியா திரும்பினார். சாஹலின் திருமணத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

எப்படி
இந்த நிலையில் சாஹலின் திருமணத்திற்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனியும் சிறப்பு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்காக சாஹல் மற்றும் அவரின் மனைவியை தோனி தனது வீட்டிற்கே அழைத்து இருந்தார். இவர்களுக்கு விருந்து வைத்தார்.

நன்றி
இந்த புகைப்படத்தை சாஹல் பகிர்ந்து நன்றி தெரிவித்து இருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி என்று கூறி சாஹல் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தில் இருந்த தோனி போனின் போட்டோதான் வைரலாகி உள்ளது.

தோனி போன்
இதில் இருக்கும் தோனியின் போனின் ஸ்கீரின் கார்ட் உடைந்துள்ளது. தோனி மிகவும் பழைய ஸ்கிரீன் கார்டை வைத்துள்ளார். இதுதான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அட தோனி என்ன இவ்வளவு பழைய போன் வைத்துள்ளார் என்று பலரும் கேட்டுள்ளனர்.

பழைய போன்
தோனியிடம் எவ்வளவு காசு இருக்கும். வேண்டும் என்றால் அவர் புதிய போனே வாங்கலாம். ஆனால் தோனி அப்படி செய்யாமல் உடைந்த ஸ்கிரீன் கொண்ட போனையே வைத்துள்ளார், எவ்வளவு எளிமை பாருங்கள் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications