Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாஜகவும் இல்லை.. காங்கிரசும் இல்லை.. வேறு கட்சி எம்எல்ஏ-வுடன் தோனி நெருக்கம்.. வைரல் போட்டோ!

Recommended Video

Dhoni played billiards| எம்எல்ஏ-வுடன் தோனி பில்லியர்ட்ஸ் விளையாடிய தோனி

ராஞ்சி : மூத்த கிரிக்கெட் வீரர் தோனி எம்எல்ஏ ஒருவருடன் பில்லியர்ட்ஸ் ஆடியதும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தோனி அரசியலுக்கு வரலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், வந்துள்ள இந்த தகவலால் தோனி, அரசியலுக்கு வரப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓய்வில் தோனி

ஓய்வில் தோனி

தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவில்லை. இராணுவத்தில் 16 நாட்கள் பணியாற்றினார்.

விளக்கம் இல்லை

விளக்கம் இல்லை

தோனி ஓய்வு பெறப் போகிறார் என அவ்வப்போது வதந்திகள் கிளம்பினாலும் அது குறித்து தோனி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கிரிக்கெட்டில் இருந்து விடுப்பில் இருக்கும் அவர், கடந்த மாதம் அமெரிக்கா சென்றார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில், சமீபத்தில் ஜார்கண்ட் கிரிக்கெட் அமைப்பின் மைதானத்தில் இருக்கும் பில்லியர்ட்ஸ் அரங்கில் தோனி, அந்த மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ குணால் சாரங்கியுடன் பில்லியர்ட்ஸ் விளையாடினார்.

ஜார்க்கண்ட் மைதான ஊழியர்

ஜார்க்கண்ட் மைதான ஊழியர்

அதன் பின் ஜார்கண்ட் மைதானத்தை சேர்ந்த பிட்ச் சீரமைப்பு ஊழியர் பாசு டா உடன் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யார் அந்த எம்எல்ஏ?

யார் அந்த எம்எல்ஏ?

குணால் சாரங்கி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர். அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளரும் அவர் தான். அந்த கட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் அவர் இருக்கிறார். இளம் வயதிலேயே அரசியலில் குதித்தவர்.

அரசியல் வருகையா?

அரசியல் வருகையா?

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏ உடன் ஏன் தோனி நெருங்கி பழகுகிறார்? அந்த கட்சியில் சேரப் போகிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அல்லது இந்த சந்திப்பு சாதாரணமான ஒன்று தானா?

முந்தைய தகவல்

முந்தைய தகவல்

முன்னதாக தோனி பாஜக கட்சியில் இணைவார் என கூறப்பட்டது. இந்தியா முழுவதும் பிரபலமான தோனி தேசிய அரசியலில் குதிப்பார் என்று சில காலமாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய கட்சி எம்எல்ஏ உடன் தோனி நெருக்கமாக இருப்பதும் பல வதந்திகளுக்கு தொடக்கப் புள்ளியாக இருக்கிறது.

கிரிக்கெட் ஆடுவாரா?

கிரிக்கெட் ஆடுவாரா?

உலகக்கோப்பை தொடருக்கு பின் நான்கு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ள தோனி அடுத்து கிரிக்கெட் ஆடுவாரா? என்பது கேள்விக் குறியாக உள்ளது. ஒருவேளை கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி அரசியலில் குதிக்கப் போகிறாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Story first published: Sunday, September 29, 2019, 17:25 [IST]
Other articles published on Sep 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+