For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் மட்டையை பிடித்த தோனி செய்த அந்த காரியம்.. இணையத்தில் வைரல் வீடியோ

Recommended Video

புல்லாங்குழல் வாசிக்கும் தல தோனி

ராஞ்சி: கிரிக்கெட் மட்டையை பிடித்த கையில் புல்லாங்குழலை பிடித்து தோனி வாசித்த வீடியோ வைரலாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக பல வெற்றிகளை ஈட்டி, ஜாம்பவானாக இருப்பவர் தல தோனி. நீண்ட காலத்துக்கு பிறகு, தமது சிகை அலங்காரத்தை மாற்றி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

3 வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த போதிலும், அவரது ஓய்வு குறித்த விவாதம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக உலக கோப்பை தொடருக்கு பின்னர் கள நிலவரமே மொத்தமாக மாறி போனது.

ஓய்வு சர்ச்சை

ஓய்வு சர்ச்சை

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க தோனி தாமாகவே முன் வந்து ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் எழுந்த வண்ணமே உள்ளன. ஆனாலும் எதையுமே சட்டை செய்யாத தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

வீடு திரும்பிய தோனி

வீடு திரும்பிய தோனி

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு தற்போது வெற்றிகரமாக வீடு திரும்பி உள்ளார். அடுத்து வரும் தென் ஆப்ரிக்க தொடர்பாக தயாராகி வருகிறார். நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புல்லாங்குழல் தோனி

புல்லாங்குழல் தோனி

தற்போது, தோனி என்ன செய்கிறார் என்பது தெரியாத போதிலும், என்ன செய்தாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் லேட்டஸ்ட்.. புல்லாங்குழல் வாசிப்பது தான். அது பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

குஷியில் ரசிகர்கள்

ஆனாலும், தோனி புல்லாங்குழல் ஊதும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி தருணத்தில், புல்லாங்குழலுடன் இருக்கும் தோனி வீடியோவை கண்டு ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர். தோனியின் இந்த வீடியோ ஏழு வினாடிகள்.

அனுபவமிக்க கலைஞர்

அனுபவமிக்க கலைஞர்

அவர் ஒரு அனுபவமிக்க கலைஞரைப் போல புல்லாங்குழல் வாசிக்கிறார். கருப்பு கண்ணாடி அணிந்து காணப்படும் அந்த வீடியோ பழையது. ஏனெனில் அதில் அம்பதி ராயுடுவும் காணப்படுகிறார். மேலும், தோனி அணிந்திருந்த இந்திய அணியின் ஜெர்சியும் பழையது. பல ஆண்டுகள் ஆனாலும் அந்த வீடியோ தான் இப்போதைக்கு தோனி ரசிகர்களிடையே வைரல்.

Story first published: Wednesday, August 28, 2019, 9:02 [IST]
Other articles published on Aug 28, 2019
English summary
Dhoni plays flute, video goes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X