Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஒற்றைக் காலில்" நின்ற டோணி!

சென்னை: வயசானாலும் உங்க ஸ்டைல் இன்னும் மாறல' இந்த டயலாக்கை கேட்காதவர்களே இருக்க முடியாது. இந்த டயலாக், இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் மகேந்திர சிங் டோணிக்கும் பொருந்தும்.

ரசிகர்களால் மட்டுமல்ல, சக வீரர்களாலும், எதிர் நாட்டு வீரர்களாலும் மரியாதையுடன் பார்க்கப்படுபவர் டோணி. ஒரு அணியின் கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர்.

வரும், 2019ல் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில், டோணி இருப்பாரா என்பது குறித்து தற்போது பட்டிமன்றம் நடந்து வருகிறது.

அனுபவஸ்தர்

அனுபவஸ்தர்

டோணி போன்ற அனுபவமிக்க மூத்த வீரர்கள் தேவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். இலங்கை அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய ஒருதினப் போட்டி அணியில் தோனி சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில், மற்ற மூத்த வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்றார் சேர்க்கப்படவில்லை.

உலகமே அறியும்

உலகமே அறியும்

இது குறித்து கருத்து கூறிய, தேர்வுக் குழு தலைவரான எம்.எல்.கே. பிரசாத், உடல்தகுதி உள்ளவர்கள்தான் இனி அணியில் இருப்பார்கள் என்று கூறினார். 5 போட்டித் தொடரில், 3-0 என இந்தியா தொடரை வென்றுள்ளது. இதில், டோணியின் அனுபவ ஆட்டம்தான் அணியின் வெற்றிக்கு உதவியது என்பதை உலகமே அறியும்.

கூல் கேப்டன்

கூல் கேப்டன்

சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரசாத், கூல் கேப்டன் டோணியின் சிறப்பு குறித்து, தனது அனுபவத்தை கூறினார்.

கடந்த ஆண்டு நடந்த, ஆசிய கோப்பை போட்டியின்போது, பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்துக்கு முந்தைய நாள், தோனி பயிற்சியில் இருந்தார்.

நடக்க முடியாத டோணி

நடக்க முடியாத டோணி

ஜிம்மில் பயிற்சியில் இருந்த அவருக்கு திடீரென தசை பிடிப்பு ஏற்பட்டது. நடக்கவே முடியாத நிலையில் இருந்த டோணிக்கு, அணி மருத்துவர்கள் சிகி்ச்சை அளித்தனர். மறுநாள் காலையில் போட்டி நடக்க உள்ள நிலையில், டோணி காயமடைந்ததால், அவருக்கு மாற்றாக யாரை அணியில் சேர்க்கலாம் என்று தீவிரமாக யோசிகிக்கப்பட்டது.

நானே விளையாடுவேன்

நானே விளையாடுவேன்

அப்போது, கண்ணா, கூல், நானே விளையாடுவேன். ஒருகால், ஒரு கால் இல்லையென்றாலும் நாளை நான் விளையாடுவேன் என்று டோணி ஒற்றைக்காலில் நின்றார். அடுத்த நாள், வலியைப் பொறுத்துக் கொண்டு, அந்தப் போட்டியில் டோணி களமிறங்கி, கீப்பிங் செய்ததுடன், பேட்டிங்கிலும் கலக்கினார். அதுதான் டோணி என்று பெருமைபடக் கூறியுள்ளார் பிரசாத்.

இளைஞர்களுக்கு முன்னுதாரணம்

இளைஞர்களுக்கு முன்னுதாரணம்

தன்னம்பி்க்கையுடன், டோணியின் மனஉறுதியை, இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டிய பாடம் என்று பிரசாத் கூறினார். வசிஷ்டர் வாயால், பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போல, உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து விமர்சனம் செய்தவரையே, தன்னை பாரட்ட வைத்த டோணியின் வெற்றிக்கு காரணம், அவருடைய தன்னம்பிக்கைதான்.

இதுதான் டோணியின் ஹெலிகாப்டர் ஷாட்டை விட, பவர்புல்லான ஷாட்.

Story first published: Tuesday, August 29, 2017, 13:22 [IST]
Other articles published on Aug 29, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+