For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷாந்த் நீக்கம் சரிதான் என்பதை நிரூபித்த 'ஷமி' .. செம பந்துவீச்சு.. டோணி பாராட்டு

By Mathi

ராஞ்சி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஷமியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது என்று இந்திய அணி கேப்டன் டோணி புகழாரம் சூட்டியுள்ளார்.

கேப்டன் டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 295 ரன்களைக் குவித்தது.

முந்தைய 3 போட்டிகளில் இஷாந்த் சர்மா ரன்களை வாரி வாரிக் கொடுத்து இந்தியாவின் தோல்விக்கு வழி வகுத்திருந்தார். நேற்றைய போட்டியில் இஷாந்த் நீக்கப்பட்டு ஷமி சேர்க்கப்பட்டிருந்தார்.

ஷமி அபாரம்

ஷமி அபாரம்

இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷமி, 42 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இந்திய அணி விறுவிறுவென ரன்களைக் குவிக்க தொடங்கியது. 4.1 ஓவரில் 27 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

வானிலை நம்ம கன்ட்ரோல் இல்லை..

வானிலை நம்ம கன்ட்ரோல் இல்லை..

நேற்றைய போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் டோணி, வானிலை என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை. அதன் முடிவை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

ஷமிக்கு புகழாரம்

ஷமிக்கு புகழாரம்

20 ஓவர் போட்டி போல நாங்கள் நினைக்கவில்லை. ஷமியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளையும் ஷமி கைப்பற்றினார் என்றார்.

கட்டாக்கில் கலக்குவோம்

கட்டாக்கில் கலக்குவோம்

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்லி கூறுகையில், நேற்றைய ஆட்டம் நன்றாகத்தான் இருந்தது. கட்டாக் போட்டியிலும் நன்றாக விளையாடி நிச்சயம் வெல்வோம் என்றார்.

Story first published: Thursday, October 24, 2013, 14:56 [IST]
Other articles published on Oct 24, 2013
English summary
The Indian skipper was full of praise for fast bowler Mohammed Shami (3/42) who impressed with his deceptive bowling. "He (Shami) is deceptive. He bowls quicker than you think. What was important was he bowled full and the wickets he got, he was hitting the bails," Dhoni said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X