Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதுக்கு 6 நாள், 3 நாளே போதும்... டோணி கருத்து

பெர்த்: 6 நாள் பயிற்சி முகாமை விட 3 நாள் விறுவிறுப்பாக பயிற்சி எடுப்பதே சிறந்தது என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.

உப்புச்சப்பில்லாமல் 6 நாட்கள் பயிற்சி முகாமில் கழிப்பது பயன் தராது. மாறாக 3 நாட்களேயானாலும் கூட உருப்படியான, விறுவிறுப்பான பயிற்சியாக அது அமைந்தால் அதுதான் சிறந்தது என்றும் டோணி கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உலகக் கோப்பைப் போட்டி போன்ற முக்கியத் தொடர்களின்போது இந்த மின்னல் வேக பயிற்சிதான் நம்மை உத்வேகத்துடன், புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும் என்றும் டோணி கூறியுள்ளார்.

2 நாள் பயிற்சிதான்

2 நாள் பயிற்சிதான்

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளின்போது தலா 2 நாட்கள் மட்டுமே இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டது நினைவிருக்கலாம். மற்றபடி இந்திய வீரர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை.

இப்பவும் அப்படித்தான்

இப்பவும் அப்படித்தான்

தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளது இந்தியா. இடைப்பட்ட காலத்தில் 5 நாட்கள் இருந்தன. இதில் 2 நாள் மட்டுமே இந்திய வீரர்கள் பயிற்சி எடுக்கவுள்ளனராம்.

தேவையில்லாம எதுக்கு டென்ஷன்

தேவையில்லாம எதுக்கு டென்ஷன்

இதுகுறித்து டோணி கூறுகையில்,ஒர்க்லோடை நாங்கள் பிரித்துக் கொள்கிறோம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயிற்சி செய்கிறோம். இதுபோதும். தேவையில்லாமல் 6 நாட்கள் மாங்கு மாங்கென்று பயிற்சி எடுப்பதற்குக அழகாக 3 நாட்கள் செய்தாலே போதும் என்றார் டோணி.

பிட்ச் நன்றாக தெரியும்

பிட்ச் நன்றாக தெரியும்

தற்போது இந்திய அணி விளையாடி வரும் பிட்ச்சுகள் எல்லாமே அந்த அணிக்கு கடந்த பல வாரங்களாக நன்றாக பரிச்சயமாகி விட்டன. காரணம் டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்புத் தொடரில் விளையாடிய அனுபவத்தால். எனவே பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லாத நிலையில்தான் இந்தியா உள்ளது.

எல்லாம் எமக்குத் தெரியும்

எல்லாம் எமக்குத் தெரியும்

ஆஸ்திரேலியாவில் நாங்கள் நீண்ட நாட்களாக இருக்கிறோம். இங்குள்ள சூழல் நன்றாக பரிச்சயமாகி விட்டது. பிட்ச் நன்றாக தெரியும். பந்து எப்படி வரும் என்று தெரியும். காற்று எப்படி வீசும் என்று தெரியும். எல்லாமே தெரிந்திருக்கும்போது தீவிரப் பயிற்சி என்பது அவசியமற்றது.

மனசு பிரஷ்ஷா இருக்கனும்

மனசு பிரஷ்ஷா இருக்கனும்

அனைவரும் மனதளவில் பிரஷ்ஷாக இருக்க வேண்டும். இது மட்டுமே எனக்கு் தேவை. மற்றபடி தீவிரப் பயிற்சிக்கான அவசியமே தேவையில்லை. காரணம் தொடர்ந்து ஆடி வருகிறோம். அதுவே நல்ல பயிற்சிதானே. எனவே தனியாக பயிற்சி என்று தேவைப்படவில்லை என்பது எனது கருத்து.

ஜிம்முக்குப் போவோம்

ஜிம்முக்குப் போவோம்

ஓய்வு நேரத்தின்போதும் கூட நாங்கள் ஜிம் அல்லது நீச்சல் குளத்தில்தான் இருக்கிறோம். அதுவும் கூட ஒரு வகையில் பயிற்சிதான்.

எல்லாம் திட்டமிட்டபடி நடக்காது

எல்லாம் திட்டமிட்டபடி நடக்காது

அதேசமயம், நாம் திட்டமிட்டபடி எல்லாமே நடக்காது. சில நேரங்களில் எதிர்பாராத சவால்கள் வரலாம். அதற்கேற்ப துரிதமாக நாம் நமது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார் டோணி.

கூல் பாஸ்!

Story first published: Tuesday, March 3, 2015, 13:28 [IST]
Other articles published on Mar 3, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+