For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல..!! ஸ்டைலும்.. ஸ்டம்ப்பிங்கும் மாறவே இல்லை!! வைரலாகும் தோனியின் ஸ்டம்ப்பிங் வீடியோ

மவுண்ட் மவுங்கானுயி:நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மின்னல் வேகத்தில் தோனி ஸ்டெம்ப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து நடைபெற் ற 2வது ஒருநாள் போட்டியிலும்... இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது, தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

ஸ்டம்ப்பிங் காட்சிகள்
அவுட்டாக்கும் காட்சிகள்

இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டியின் போது தோனியின் அதிவேக ஸ்டம்ப்பிங் காட்சிகள் இணையத்தில் வைரலாகி கலக்கி வருகின்றன. அந்த போட்டியில் பேட்டிங்கிலும் கலக்கிய தோனி 48 ரன்கள் எடுத்தார்.

3 விக்கெட் இழப்பு

3 விக்கெட் இழப்பு

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து... ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்திருந்தது. வெற்றி யார் பக்கம் என்றே கணிக்கமுடியாத அளவுக்கு இருந்தது.

நம்பிக்கை நாயகன் டெய்லர்

நம்பிக்கை நாயகன் டெய்லர்

நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரரான ராஸ் டெய்லர் களத்தில் நின்றிருந்தார். அணியின் நம்பிக்கைக்குரிய அவரின் விக்கெட் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும்.

தோனியிடம் தஞ்சம்

தோனியிடம் தஞ்சம்

18வது ஓவரில் முதல் பந்தை வீசுகிறார் கேதர் ஜாதவ். பந்து அவரது பேட்டில் படாமல் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பர் தோனியின் கைகளுக்குள் தஞ்சம் அடைகிறது.

3வது நடுவர்

3வது நடுவர்

விநாடிக்கும் குறைவான நேரத்தில் தோனி ஸ்டெம்பிங் செய்கிறார்.அம்பயரிடம் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அவுட் கேட்க... முடிவு 3வது நடுவரின் கைகளுக்கு செல்கிறது.

வைரலான வீடியோ

ஸ்டெம்பிங்கா... அவுட்டே இல்லை என்று வெகுசாதாரணமாக களத்தில் இருந்த டெய்லரோ லேசாக அதிர்ச்சியாகிய வெளியேறினார். அவுட் ஆன விடியோ இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.

Story first published: Saturday, January 26, 2019, 17:07 [IST]
Other articles published on Jan 26, 2019
English summary
Dhoni produces lightning fast stumping to dismiss Taylor, 2nd ODI against new Zealand goes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X