Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சண்டேவை ஜாலிடே ஆக்கிய டோணி

கொழும்பு: கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த பினிஷர் என்று கொண்டாடப்படும் கேப்டன் கூல், டோணி, மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியதற்கு காரணம் ரொம்ப பெரிய ரகசியமெல்லாம் இல்லை.

ரொம்ப சிம்பிள் தான். கூலாக இருப்பது, எந்த சூழ்நிலையிலும் பதற்றப்படக் கூடாது, இக்கட்டான நேரத்தில் திறமையை வெளிப்படுத்துவது, தான் மட்டும் விளையாடாமல், மற்றவர்களையும் ஊக்குவிப்பது என்று மேலாண்மை படிப்பவர்கள், அவருடைய தனிப்பட்ட குணநலன்களை படித்தாலே போதும்.

இதைவிட, அனைவருடனும் இணைந்து, அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி, தன் மீதுள்ள மிகப் பெரிய பிம்பத்தை உடைத்து, நானும் உங்களில் ஒருவன் தான் என்பதை மீண்டும் மீண்டும், டோணி நிரூபித்து வருகிறார்.

ஆனந்தக் கண்ணீர்

ஆனந்தக் கண்ணீர்

உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றபோது, டோணிக்கு அதுதான் முதல் கோப்பை. ஆனாலும், மூத்த வீரரான சச்சின் டெண்டுல்கரிடம் அதை கொடுத்து, அவருடைய கண்ணில் இருந்து வழிந்த ஆனந்த கண்ணீிரைப் பார்த்து நெகிழ்ந்தவர் டோணி.

100 ஸ்டம்பிங்

100 ஸ்டம்பிங்

இலங்கை அணிக்கு எதிரான தொடரில், விக்கெட் கீப்பராக 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர் என்ற சாதனையை நேற்று நிகழ்த்தினார் டோணி.

ஆனால் அதற்காக தலைகனம் பிடித்து ஆடாமல், தல டோணி, வீரர்களுடன் மைதானத்தில் ஜாலி ரவுண்ட் வந்து, தான் சிறந்த கேப்டனாக கொண்டாடப்படுவதற்கான காரணத்தை உணர்த்தினார்.

காரில் ரவுண்டு

காரில் ரவுண்டு

இலங்கைக்கு எதிரான தொடர் வெற்றிக்கு பிறகு, தொடர் நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. அதற்காக, பும்ராவுக்கு வழங்கப்பட்ட காரில், அணியின் இளம் வீரர்களை அழைத்துக் கொண்டு, மைதானத்தை வலம் வந்தார் டோணி.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

இதை கொண்டாட்டமாக பார்த்தாலும், டோணியின் மிகப் பெரிய வெற்றிப் பயணத்தின் ஒரு அத்தியாயமாகவும் பார்க்கலாம். தற்போதைக்கு அணியில், வயதில் மூத்தவரான டோணி, இளம் வீரர்களுடன் சகஜமாக பழகியது, `நான் என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்றால்தான் உதடுகள் ஒட்டும்' என்பதை உணர்த்தியுள்ளார்.

2019 உலகக் கோப்பை போட்டிக்கு அணியை தேர்வு செய்வோர், இதை கொஞ்சம் கவனத்தில் வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்.

Story first published: Monday, September 4, 2017, 13:04 [IST]
Other articles published on Sep 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+