தோனி திட்டமிட்டு இந்தியாவை தோல்வி அடைய செய்தார்.. ஆதாரங்களை அடுக்கும் யுவராஜ் சிங் தந்தை.. திடுக்!
Recommended Video
லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனலில் தோனி இந்தியா தோற்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆடினார் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில் தோனி வரிசையாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவரின் ஓய்வு தொடர்பாக நிறைய சர்ச்சையான கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
தோனி மீது தொடர்ச்சியாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நிறைய புகார்களை அளித்து வருகிறார். தோனிதான் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தது. யுவராஜ் சிங்கிற்கு இந்திய அணியின் கேப்டன் ஆகும் வாய்ப்பை பறித்தது தோனிதான் என்று பல முறை யுவராஜ் சிங்கின் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்
தற்போது யோக்ராஜ் சிங் உலகக் கோப்பை செமி பைனல் போட்டி குறித்தும் பேசி இருக்கிறார். அதில், தோனி வேண்டும் என்றேதான் செமி பைனல் போட்டியில் மோசமாக விளையாடினார் . அவர் நினைத்து இருந்தால் அந்த போட்டியில் வென்று இருக்க முடியும்.

ஏன் வேண்டும்
ஆனால் தோனி வேண்டும் என்றே ரன் அவுட் ஆனார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடும் போது தோனி இப்படி ஆட மாட்டார். அப்போது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தோனி ஆடுவார். இந்திய அணிக்காக அன்று அவர் அப்படி ஆடவில்லை.

ஜடேஜா மட்டுமே
ஜடேஜா மட்டும்தான் அன்று நடந்த போட்டியில் அதிரடியாக ஆடினார். ஆனால் தோனி வேண்டும் என்று மெதுவாக ஆடினார். இந்தியாவை தோல்வி அடைய செய்ய வேண்டும். இந்தியா பைனலுக்கு செல்ல கூடாது என்று கருத்தாக அவர் ஆடினார்.

என்ன காரணம்
இதற்கு காரணம் இருக்கிறது. தோனி தான்தான் உலகக் கோப்பையை வென்ற ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கோலி உலகக் கோப்பையை வென்றுவிட கூடாது என்று உறுதியாக இருக்கிறார். அதனால்தான் தோனி திட்டமிட்டு அப்படி விளையாடினார், என்று பரபரப்பு குற்றச்சாட்டை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications